Posts

Showing posts from June, 2018

Thiruvannamalai_திருவண்ணாமலை கிரிவலம்

Image
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பெயர் பெற்றது. மொத்தம் 14 கிலோமீட்டர் தூரம். நாம் நடக்கும் போதே நம்முடன் பல சித்தர்களும் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. நாம் கிரிவலம் வரும்போது அம்மலையை சிவனாக கருதி 'ஓம் அருணாச்சலேஸ்வராய நம:' என்று சொல்லிக் கொண்டே செல்ல வேண்டும். ரமணமகரிசி, யோகி ராம் சுரத்குமார் போன்ற மகான்கள் கிரிவலம் சென்றே தம் சக்தியை கூட்டியுள்ளனர். தொடர்ந்து 16 முறை செல்வோருக்கு மறுபிறப்பு கிடையாது. அதற்கு மேலும் செல்லலாம் நாம் கிரிவலம் செல்லச்செல்ல நமக்கு மனோதிடமும், சொல்வன்மையும் கிட்டும் என்பது திண்ணம். கிரிவலம் செல்ல பௌர்ணமியை விட தேய்பிறை சிவராத்திரி மிகவும் விஷேசம். எந்த நாளில் வேண்டுமானாலும் செல்லலாம், அஷ்டமி,  கரிநாள் உள்பட. சிவனை தரிசிக்க எந்நாளும் பொன் நாளே!

Hair maintenance _கூந்தல் பராமரிப்பு

Image
கூந்தலை ஈரமாக இருக்கும் போது முடியக் கூடாது. தலையில் போதுமான அளவு எண்ணை இருந்தால் போதும். அதிகமாக இருந்தால் பொடுகு உண்டாகும். வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஒருவர் பயன்படுத்திய சீப்பு, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்த கூடாது. இரவு தலையில் சிக்கு எடுத்துவிட்டு படுக்கச் செல்ல வேண்டும். கூந்தலுக்கு சாம்புவைக் காட்டிலும் சீயக்காய் மேலானது. சத்தான உணவு உட்கொள்வதாலும் கூந்தலை பாதுகாக்கலாம்.

Green grams_sprouts_பாசிப் பயறு என்னும் சிறுபயறு

Image
பாசிப் பயறு என்னும் சிறு பயறில் நிறைய புரதம்  மற்றும் கால்சியம் உள்ளது. நம் குழந்தைகளுக்கு பள்ளிக்கு பிஸ்கட்டுகளுக்கு பதிலாக இந்த பயறை முளைகட்டி வேக வைத்து கொடுத்தால் பலன் ஏராளம். பாசிப்பயறு சாப்பிட்டால் அல்சர் குணமாகும், முகம் வசீகரமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

Horse gram benefits_ கொள்ளின் மகிமை

Image
இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். அதன் பயன்கள் தெரியுமா? கொள்ளில் நிறைய கால்சியம், புரதம், இரும்பு மற்றும் புரத சத்துகள் உள்ளன. கொள்ளை முளை கட்டி வைத்து சாப்பிட்டால் பலன் பன்மடங்கு. இதை வாரம் மூன்று முறையாவது எடுத்துக் கொள்ளவேண்டும். கொள்ளை துவையலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

Cultural games!_பாரம்பரிய விளையாட்டுக்கள்.

Image
இன்றைய தலைமுறைக் குழந்தைகள் கம்பியூட்டார் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் போன்ற விளையாட்டுகளையே அதிகம் விளையாடுகின்றனர். இதனால் கண்கள் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, மனநலமும் பாதிக்கப்படுதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் நிறைய உள்ளன. ஆடு புலி ஆட்டம்,நொண்டி, பல்லாங்குழி போன்றவை. இவ்விளையாட்டுகளால் குழந்தைகளின் நினைவாற்றல் பெருகுகிறது. இவ்வகை விளையாட்டுகளை பெற்றோரும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது அவர்களுக்கு தன்நம்பிக்கை ஏற்படுகிறது. சில தரமான பள்ளிகளில் இவ்விளையாட்டுகளை ஊக்கப்படுத்துகின்றன. வெளிநாட்டு பள்ளிகளில் கூட இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை வரவேற்கின்றன. நாமும் நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டை விளையாடுவதற்கு உற்சாகப் படுத்துவோம்.

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

Image
நமக்கு நிலத்தடிநீர் குறைந்து வருவது அறிந்ததே! இன்னும் 30 வருடத்தில் நம் சந்ததியினர் நீருக்காக மிகவும் அவதிக்குள்ளாக போகிறார்கள். ஏனெனில் அப்போது நிலத்தில் சுத்தமாக தண்ணீர் கிடைக்காது. இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க உள்ள சில வழிகளில் ஒன்று நிறைய மரங்கள் வளர்த்தல், மற்றொன்று மழைநீர் சேகரித்தல். மழைநீர் சேகரிப்பு தொட்டி நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்க வேண்டியது அத்தியாசியம். நாம் நம் குழந்தைகளுக்காக வீடு, நகை போன்றவைகளை சேமித்தாலும் அதை விட மிகவும் அவசியமானது மழைநீரை சேமிப்பது. மழைநீரை எவ்வளவு நாட்கள்  சேமித்து வைத்தாலும் அது கெட்டு போவது இல்லை. சராசரியாக நாம் நம் வீட்டுமழைநீரை சேமித்து பயன்படுத்தினாலே நமக்கு ஒரு  வருடம் நிலத்தடிநீருக்கான தேவை இருக்காது. இதற்கு சில ஆயிரங்கள் செலவுதான் என்றாலும், அதன் பயன்கள் கணக்கில் அடங்காதது. நாம் நம் சந்ததியினருக்கு செய்யும் பெரும் உபகாரம், அவர்களுக்கு சொத்து சேர்த்து கொடுப்பதல்ல. மழைநீரை சேகரித்து அதன் மூலம் நிலத்தடிநீரைப் பாதுகாப்பதே. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிலத்தடிநீரைக் காப்போம்.

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

Image
என் மனதை மிகவும் பாதித்த விசையத்தை இங்கே பதியலாம் என எண்ணுகிறேன். நெகிழி நம் அன்றாட பயன்பாட்டு பொருளாகியுள்ளது. அது விளைவிக்கும் கேடு பெருமளவு. நெகிழியை எரித்தால் உண்டாகும் 'டையாக்சின்'என்னும் நச்சுப்புகை உடலுக்கு மிகவும் தீங்கானது. நாம் உண்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களை விலங்குகள் உண்பதால் அவைகளின் உணவுக் குழாய் பாதிப்படைகிறது. நாம் சூடான உணவுப் பொருள்களை நெகிழித் தாள்களில் வைத்து உண்பதால் உண்டாகும் நோய்களில் புற்றுநோய் முதன்மையாது. நெகிழிகள் மண்ணில் கலந்து வேளாண் வளத்தை குறைப்பதுடன். கடலில் கலந்து அங்கு வாழும் மீன்களின் உணவு மண்டலத்தை பாதிப்பதுடன், மீன்களை சாப்பிடும் மனிதர்களின் உடலுக்கும் கேடுவிளைவிக்கிறது. இவ்வளவு அபாயகரமான நெகிழியை முடிந்த அளவு நாம் பயன்படுத்தாமல் தவிர்ப்போம். அதன் உற்பத்தியை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Riddle_Story_புதிர்க்கதை

Image
ஆற்றின் ஒரு கரையில் நரி, ஆடு, புல்லுக்கட்டு ஆகிய மூன்றும் இருந்தது. இம்மூன்றையும் மறுகரைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். எத்தனைமுறை வேண்டுமானாலும் வந்து செல்லலாம். நரி ஆட்டையோ, ஆடு புல்லுக்கட்டையோ தின்றுவிடக்கூடாது. புதிருக்கு விடை தெரியுமா?

Best direction to put bore_எந்த திசையில் 'போர்' போடலாம்?

Image
      நவக்கிரங்களில் சந்திரனே ஜலக்கிரகம் ஆகும். ஒரு வீட்டில் வடகிழக்கு மூலை என்பது குருவுக்கும்,சந்திரனுக்கும் உகந்த திசையாகும். அந்த திசையில் போர் போடுவதன் மூலம். நன்றாக தண்ணீர் வருவதுடன் வீட்டில் பொன்,பொருள் சேரும்.                                                                                           

Things to follow while eating...சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டியவை..

Image
சாதத்தை உருட்டி உருட்டி சாப்பிடக்கூடாது. கை கழுவும் போது பிறர் மேல் படக்கூடாது. அதிகம் பேசிக்கொண்டு சாப்பிடக்கூடாது. பந்தியில் உட்காந்து கொண்டு அடுத்தவர் மனம் புண்படும் படி பேசக் கூடாது. உள்ளங்கையில் சாப்பாடு ஒட்டாமல் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்தக்கூடாது. சாப்பிடத் தொடங்கும் முன் 'ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி சாப்பிடுவது தான் உகந்த முறையாகும்.

Attention pani puri lovers!பானிபூரி பிரியர்களுக்கு

Image
பானிபூரியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் யாரும் பானிபூரி தயாரிப்பதை பார்த்ததுண்டா? இம்முறையில் தான் பானிபூரி மாவு பிசையப் படுகிறது. தடை செய்யப்பட்ட எண்ணையில் பொரிக்கப்படுகிறது. தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும்.

Husband and wife jokes_கணவன் மனைவி ஜோக்ஸ்

Image
கணவன் : எதுக்கு இப்படி தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீஸ்க்கு வந்த. மனைவி  : இல்லங்க வீட்டுல வேலைக்காரிய காணாம் எங்கயோ போய்டா. ஆபீஸ்ல நீங்க இருக்கிங்களா? இல்லையானு பார்க்க வந்தேன்.                    ---------------------------------------------------------- மனைவி : ஏங்க உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கனும் போல இருக்குங்க. கணவன் : ஜோசியக்காரன் சொன்னான். கல்யாணத்துக் அப்பறம் சனியின் பார்வை உன் மேல விழும்னு.

Water treatment _தண்ணீர் வைத்தியம்

Image
மக்கள் இன்று பல வகையான நோய்களால் அவதிப்படுகின்றனர். ஆனால் அப்பலவகையான நோய்களுக்கு தீர்வு உள்ளது. சூடான ஒரு டம்ளர் தண்ணீர். ஆம், தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் குடித்தால் நம் உடம்பில் ஏற்படும் 99 வகையான நோய்கள் குணமாகும். ஆம் மிக எளிமையான இந்த தண்ணீர் சிகிக்சையால் புற்றுநோய் , சர்க்கரை நோய் உள்பட பலவகையா நோய் குணமாவதாக ஆராய்ச்சி கூறுகிறது.

Gandhamma granny(short story)_காந்தம்மா பாட்டி (சிறு கதை)

Image
காந்தம்மா பாட்டி என்றால் அவ்வூரில் எல்லோருக்கும் மரியாதை.  பாட்டிக்கு வயது 73,ஆனாலும்  இன்னும் உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்று இறுமாப்போடு பழ வியாபாரம் செய்து வந்தாள். பாட்டிக்கு 3 மகன்கள், 2மகள்கள் கணவர் இறந்துவிட்டார். இரண்டாவது மகள் ஒரு பெண் குழந்தையை பெற்றுப் போட்டு இறந்து போனாள். அவள் கணவர் ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை ஆகிவிட்டான். அக்குழந்தையின் பெயர் மீனாட்சி. எங்கு  சுமை நம் மீது விழுந்து விடுமோ என காந்தம்மா பாட்டியை ஓரம் கட்டினார்கள் கிழவி பெற்ற வள்ளாளகண்டன்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் வைராக்கியம் தான் நம் உயிரை வாழ வைக்கும் என்பது பாட்டிக்கு பொருந்திப் போய்விட்டது. தன் பேத்தியை டாக்டருக்கு படிக்க வைக்க முடிவெடுத்து விட்டாள். தான் பெற்ற அம்மா இருந்தால் கூட இவ்வளவு  மெனக்கெட மாட்டாள் என்னை படிக்க வைக்க என்று தன் தோழிகளிடம் மெச்சுவாள் மீனாட்சி. பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை என்றால் இவள் போவாள் பழவியாபாரத்திற்கு. அன்று நடந்த பாடத்தை தோழிகளிடம் கேட்டு இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பாள். மீனாட்சிக்கு மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்த...

Husband and wife jokes_கணவன் மனைவி ஜோக்ஸ் 😃😃😃😃

Image
கணவன் : இன்னும் சமையல் ஆகலையா?நான் ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கிறேன். மனைவி : கொஞ்சம் ஐந்து நிமிடம் பொறுங்கள். கணவன் : அதற்குள் ஆகிவிடுமா? மனைவி : இல்லை நானும் புடவையை மாற்றி வருகிறேன். ------------------------------------------------------------------- அவன்  : சார், என் மனைவியைக் காணவில்லை. இவன்  : சார்,இது போஸ்ட் ஆபீஸ். அவன் : ஐயோ! சந்தோஷத்துல எங்க போறதுன்னு தெரியல!

Yum..!Badam Milk!சத்தான பாதாம் பால்

Image
பாதாம் பருப்பு - 4 முந்திரி பருப்பு- 4 ஏலக்காய்         - 2 பேரிச்சம்பழம்- 4 வெல்லம்         - சிறிது இவைகளை சின்ன ஜாரில் தூளாக்கி கொள்ளவும். பாலை காய்ச்சி அதில் சிறிது குங்குமப்பூ அரைத்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து காய்ச்சி பருகவும்.(தூள் கொரகொரப்பாகத் தான் இருக்கும்).

Amazing singing!_இரண்டு வயது குழந்தையின் பஜனையைக் கேளுங்கள்..

Image
இரண்டு வயதுக் குழந்தைக்கு அழகான சங்கீத ஞானம். தெய்வீகக் குரல். வாழ்த்துக்கள்.

Growing a child....குழந்தை வளர்ப்பு

Image
நாம் பொருட்கள் வாங்கச் செல்லும் போது(Shopping) குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகளுக்கு பொருட்களின் தன்மை பற்றி தெரிவதுடன், பணத்தின் மதிப்பும் புரியும். (பொருட்கள் கேட்டு அழும் குழந்தை என்றால் நான் பொறுப்பல்ல).😜😃 பொற்றோர்கள் குறிப்பாக அம்மாக்கள் குழந்தைகள் முன் அழுவதோ, பயத்தை வெளிப்படுத்துவதோ கூடாது. அவர்கள் நாம் தைரியமாக இருந்தால் தான் அவர் தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள். பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,தவறான தொடுதல்(Good touch and bad touch) பற்றி நன்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

Hair growth remedy....முடி அடர்த்தியாக வளர...

Image
முடி அடர்த்தியாக வளர கறிவேப்பிலை, மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்திப் பூ இவைகளை சம அளவு எடுத்து அரைத்து நிழலில் காயவைக்க வேண்டும். காய வைத்ததை பொடி செய்து தேவையான அளவு தேங்காஎண்ணையில் போட்டு தலைக்கு தேய்த்து வர முடி நன்கு அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

Jimmiki Kammal(short story)....ஜிமிக்கி கம்மல்(சிறு கதை)

சாரதாவின் கணவர் கணேசன் ஒரு ஆட்டோ ஓட்டுனர்,  அதுவும் வாடகை ஆட்டோ. சவாரி கிடைத்தால் தான் அவர்களுக்கு சாப்பாடு. ஏழ்மையில் வாழும் குடும்பம். கணேசனின் ஆட்டோ உரிமையாளர் மகள் திருமணம். சாரதாவிற்கு அக்கல்யாணத்திற்கு பகட்டாக செல்ல வேண்டும் என்று ஆசை. அதற்கு ஒரு கம்மலாவது வேண்டும் அல்லவா? ஆனால் இங்கே ஒரு கடுக்கனுக்கு கூட வழி இல்லை. சாரதாவின் பக்கத்து வீட்டு ஜானகி வசதியானவள். சாரதாவிடமும் மிகவும் அன்பாக இருப்பாள். சாரதாவிற்கு அவளிடம் போய் இரவல் கேட்க யோசனை தோன்றியது. மறுநாள் ஜானகி சாரதாவை தன் அறைக்கு கூட்டிச்சென்று பீரோவில் இருந்து ஒரு பெரிய பெட்டியை எடுத்தாள். அப்பெட்டியில் இருந்து வேண்டிய கம்மலை எடுத்துக்கொள்ள சொன்னாள். ஜானகிக்கு இது கனவா? நனவா? என்று தெரியவில்லை. ஏராளமான கம்மலில் ஒன்று மட்டும் கண்ணைப் பறிக்க அதையே எடுத்துக் கொண்டாள். சாரதா அந்த கம்மலை போட்டு அலட்டிய அலட்டலில் ஒரு காது கம்மலைக் காணவில்லை. தலையில் இடி விழுந்தது போல் இருந்தது கணவனுக்கும்,மனைவிக்கும். நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு புது ஜோடி கம்மல் வாங்கிக்கொடுத்து விடுவோம் என்று முடிவுக்கு வந்தனர்.ஊரில் உள்ள எல்லா நகைக்...

ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்.

Image
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்காரம் ப்ராப்ய நிசாம்ய ராமதாயிதாம் பங்க்த்வா வனம் ராசஸான் அஷாதீன் விநிஹத்ய வீஷ்ய தசகம் தக்த்வா புரீம் தாம்புன: தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் ராமசந்த்ரம்பஜே இதை தினமும் காலையும் மாலையும் பாராயணம்  செய்தால் சகல நன்மை உண்டாகும்.

Tamil!!!!....தமிழனின் பெருமை..

Image
ஒரே சிற்பத்தில் ஒரு பக்கம் பார்த்தால் காளையாகவும், மறுபக்கம் பார்த்தால் யானை போன்றும் தோன்றும் சிற்பம் தமிழரின் சிற்பக்கலையின் அறிவுத்திறன் வெளிப்படுகிறது. கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் ஒரு போரில் கூட தோற்றது இல்லை என்று தெரிந்த நம் பலருக்கு வீரத்தமிழன் இராஜராஜன் ஒரு போரில் கூட தோற்றது இல்லை என்று தெரியாது.

Chellakutty__செல்லக்குட்டி

Image
கொண்டாட்டமோ! கொண்டாட்டம்! எதனால் இந்த கொண்டாட்டம்! நம் மனதை வென்றதாலோ இந்த கொண்டாட்டம்! எதை கொள்ளை கொண்டாய்? உனக்கு இந்த மெத்தனம்!

Amazing Dance!...பொம்முகுட்டியின் நடனம்....

                                  பொம்முகுட்டியின் நடனம் : என் தோழி அனுப்பிய வீடியோக் காட்சி. நாம் எத்தனையோ நடனங்களை பார்த்திருப்போம், ஆனால்  இது போன்ற குழந்தைகளின் நடனத்தை பார்க்கும் போது எவ்வளவு பிரச்சனை நமக்கு இருந்தாலும் அவைகளை மறந்து மனம் சந்தோஷமாகிவிடுகிறதுதானே?

Simple medical remedies...எளிய மருத்துவக்குறிப்புகள்....

குதிகால் வலி, மற்றும் மூட்டு வலிக்கு எருக்க இலைகளை கொதிக்க வைத்து காலில் ஒத்தடம் கொடுப்பதால் நிவாரணம்  கிடைக்கும். ஒற்றை தலைவலிக்கு வெற்றிலையை கிளித்து தலையில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் குணமாகும். வாயுத் தொல்லை இருப்பவர்கள் பாத்திரத்தில் சிறிது சீரகம்,மிளகு, 3வெள்ளை பூண்டு, சோம்பு, சிறிது பெருங்காயம், சிறிது வெந்தயம் இவைகளை லேசாக வறுத்து கஷாயம் காய்ச்சி குடித்தால் குணமாகும்.

Growing a child...குழந்தை வளர்ப்பு.....

குழந்தைகளுக்கு தன் அப்பா, அம்மாதான் முன்உதாரணம்(Role model) எனவே அவர்கள் முன் நாம் கண்ணிமாகவும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் கேட்கும் அனைத்து பொருள்களையும் வாங்கித்தர வேண்டிய அவசியம் இல்லை, இல்லையென்றால் அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்களை கேட்க பழக்க வேண்டும்.

Cooking tips!...சமையல் குறிப்புகள்....

சப்பாத்தி மாவு பிசையும் போது 2 பிரட் துண்டுகளை நீரில் நனைத்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போது சிறிது ஜவ்வரிசியும் சேர்த்து உறவைத்து அரைத்தால் அடை மொருமொருப்பாக இருக்கும். கறி, கோழி, மீன் இவற்றில் உப்பு கூடிவிட்டால் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்தால்  உப்பு குறைந்துவிடும்.

வீட்டுக் குறிப்புகள்.....

பட்டுப்புடவையில் எண்ணை பட்டுவிட்டால் அந்த இடத்தில் சிறிது Shampoo போட்டு தேய்த்தால் கறை போய்விடும். எண்ணை பலகாரம் வைக்கும் டப்பாவில் சிறிது உப்பை முடிந்து போட்டால் கார வாடை வராது. இட்லிக்கு அரைக்க ஊறவைத்த உளுந்தை சிறிது நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அரைத்தால் இட்லி பஞ்சுபோல் இருக்கும்.

Riddles....விடுகதைகள்...

ஊர் சுற்றகூட வருவானாம்,ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான். அவன் யார்? சேற்றிலே முளைத்தவளுக்கு ஆகாயத்தில் காதலனாம். அது யார்? தொப்பி போட்ட காவல்காரன் உரசிவிட்டால் ஊரையே கொழுத்திடுவான். அது என்ன?

குழந்தை பராமரிப்பு......

குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களை பாராட்ட தவறக்கூடாது. பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டையிடக் கூடாது. நன்றி, மன்னியுங்கள்(Thanks, sorry) இந்த வார்த்தைகளை குழந்தைகள் அடிக்கடி சொல்ல பழகவேண்டும்.

அஞ்சறைப்பெட்டி ....

ரவையை வாங்கியதும் வறுத்து வைத்தால் வண்டு வராது. அரிசி,பருப்பு போன்றவைகளில் வேப்ப இலைகளை போட்டு வைத்தால் வண்டு வராது. அலுமினிய டப்பாவில் கருவேப்பிலைகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரும்.

வீட்டுக் குறிப்புகள்......

வீடு துடைக்கும் போது அந்த தண்ணீரில் சிறிது உப்பும்,மஞ்சளும் சேர்த்து துடைத்தால் அவை சிறந்த கிருமி நாசினி. ஜன்னல் கம்பிகளை பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்தால் சுலபமாக இருக்கும். நாம் வாங்கும் சோப்புகளின் உறைகளை(Cover) கீழே போடாமல் அதை அலமாரி தட்டுகளில் வைத்தால் துணிகள் வாசமாக இருக்கும்.

எளிய மருத்துவக் குறிப்புகள்....

பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு இரத்தக் கொதிப்பைக் குறைத்து, மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. ஆப்பிள்,திராட்சை, நெல்லி போன்றவை இளமையைக் கொடுக்கும். முதுமை காரணமாக வரும் கண் பார்வைக்கோளாறை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முட்டை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம். .

முதியோர் பராமரிப்பு....

நம் வீட்டு குழந்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் முதியோருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுடன் பேசுவதற்கு சில மணி நேரங்களை ஒதுக்க வேண்டும். அவர் கோபப்படுவதை பெரிதுபடுத்தாமல் அனுசரிக்க வேண்டும். அவர்களின் அறிவுரையயை அவ்வப் போது கேட்பதன் மூலம் அவர்கள் தான் அங்கீகரிக்கப் படுவதாக உணர்வர்.

எளிய மருத்துவ குறிப்புகள்....

மீனில் "ஒமேகா 3" உள்ளதால் அது உடலுக்கும் இதயத்திற்கும் நல்லது எனவே அதை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடனும் பொறுமையுடனும் இருப்பவர்களிடம் இதயநோய் நெருங்காது, எனவே  மகிழ்வாக இருக்கப் பழகுங்கள்.

வாழ்க தமிழ்

என் குலத்தின் தாய்மொழி வாழ்க! சங்கம் வளர்த்த தமிழ் வாழ்க! மண்ணில் பண்பை விதைத்த மொழி வாழ்க! உலகில் பிறந்த முதல் மொழி வாழ்க! மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாம் என் தமிழ்மொழி வாழ்க! வாழ்கவே!

கர்ப்பிணிப் பெண்களுக்காக......

கர்ப்பிணிகள் மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். துவரம் பயறை முளைக்கட்ட வைத்து அதை மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால்  குழந்தையின் மூளை வளர்ச்சி நன்கு இருக்கும். தண்ணீர் ஆகாரங்கள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். பழச்சாறுகள், தண்ணீர் காய்கறிகள்,குறிப்பாக குடிதண்ணீர் நிறைய அருந்த வேண்டும்.

எளிய மருத்துவ குறிப்புகள்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு :     புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோற்றுக்கற்றாலையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். மற்றும் நண்டு, மீன், பூண்டு, ப்ராக்கோலி போன்றவற்றை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வயிற்றுப் பூச்சிகள் போக : மாங்கொட்டை பருப்பை நன்றாக காய வைத்து தூள் செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர வயிற்றுபூச்சி போகும். இரத்தக் கொதிப்பு, குடல் புண் குணமாக :  ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு கட்டுப்படும்.

அஞ்சறைப் பெட்டி

இட்லி மிருதுவாக இருக்க உளுந்தை அரைக்கும் போது சிறிது குளிர்ந்த நீர்(Ice water)ஊற்றி அரைத்தால் இட்லி மெதுவாக இருக்கும். உளுந்த வடைக்கு உளுந்து ஊறப்போடும் போது சிறிது பச்சரிசியும் சேர்த்து போட்டு அரைத்தால் வடை மொருமொருப்பாக இருக்கும். பூரி மாவை மிகவும் கெட்டியாகவும், சப்பாத்தி மாவை கொஞ்சம் நெழுகலாகவும் பிசைய வேண்டும்.

குட்டி தேவதைகள்

நாம் ஈன்றெடுத்த கடவுளின் குழந்தைகளே நம் வீட்டு குட்டி தேவதைகள். ஒவ்வொரு  நாளும் நமக்கு ஒரு அன்னையாக, நண்பனாக, பல சமயங்களில் நமக்கு ஆசானாகவும் உள்ளனர். பள்ளிவிடுமுறையின் போது நமக்கு தலைவலியை கொடுத்தாலும் பள்ளிக்கு சென்றபின் நம் வீட்டிற்கு மட்டும் அல்ல நம் மனதிலும் வெறுமையை உண்டாக்கி விடுகின்றனர். உண்மைதானே?

மழலை மொழி

குழந்தைகளிடம் வன்முறையை தவிர்க்கவும். குழந்தைகளுடன் சேர்ந்து நாமும் விளையாட வேண்டும். குழந்தைகளின் துணிச்சலான செயல்களைக்கண்டு பாராட்ட வேண்டும். மரியாதை என்பது பெரியோருக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் வழங்கப்படவேண்டடும்.

குடும்பம் ஒரு கோவில்......

பெண்ணிற்கு அழகு இன்முகம், கனிவு, கருணை, சாந்தம், பெருந்தன்மை,  பொறுமை. ஆணுக்கு அழகு கம்பீரம், உலகஅறிவு, செயல்திறன், நல்லோர் நட்பு, அஞ்சாமை, தன்னம்பிக்கை. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நண்பர்களாய், மந்திரியாய், ஆசிரியர்களாய், விருப்பங்களை நிறைவேற்றும் உதவியாளர்களாய் இருக்க வேண்டும். கணவரின் உறவினர்க்கு மனைவியும், மனைவியின் உறவினர்க்கு கணவரும் மரியாதை  காட்ட வேண்டும். 

எளிய சில மருத்துவ குறிப்புகள்

உடல் சக்தி பெற:  உடல் பலவீனமானவர்கள்,நோய் வாய்ப்பட்டவர்களும் ஆரஞ்சுப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சக்தி பெறலாம். இரத்தத்தை சுத்தப்படுத்த: முருங்கைக்கீரை, நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாவதுடன் இரத்த அழுத்தம்  குறையும். நரம்பு தளர்ச்சி நீங்க : நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வர குணமாகும். வாந்தி நிற்க :  இஞ்சிச் சாறும் அதனுடன் சம அளவு வெங்காயச் சாறும்கலந்து காலையில் சாப்பிட்டு வர வாந்தி நிற்கும். வாயுத் தொல்லை நீங்க : சுக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு வாயுத்தொல்லை உள்ள நேரங்களில் சிறிது வாயில் போட்டு தண்ணீர் குடிக்க குணமாகும். சரக்கரை நோய் குணமாக : சர்க்கரை நோயுள்ளவர்கள் தினசரி மூன்று நெல்லிக்காயுடன் வெந்தயக் கீரையை சேர்த்து சாப்பிட்டு வர அதிலிருந்து விடுபடலாம். இருமல் குறைய : தினமும் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் மூன்று ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும். தொப்பையை குறைக்க : உணவில் அடிக்கடி வாழைக்காயை மற்றும் வாழைத்தண்டு இவைகளை சேர்த்தால் தொப்பை குறையும். சளி, மூக்கடைப்பு தீர : சிறிது மிளகுத்தூள...

எது அவசியம்?

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்! வெற்றி வந்ந்தால் பணிவு அவசியம்! எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்! எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்!                                                                            ஆசிரியர்                                                                     ஸ்ரீ

சுறுக்கமான சுந்தரகாண்டம்

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று காகுஸ்னிடம் சொன்ன கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது அஞ்சனை தனயன்  அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான். அனைத்து வானரங்களும் அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே! வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள் வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே! மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து  சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான். இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான். அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான். சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும் சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான். ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட வைதேகி கலங்கிட,வந்தான் துயர் துடைக்க கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம் கொண்டு அசோகவனம் அழித்...