Jimmiki Kammal(short story)....ஜிமிக்கி கம்மல்(சிறு கதை)
சாரதாவின் கணவர் கணேசன் ஒரு ஆட்டோ ஓட்டுனர், அதுவும் வாடகை ஆட்டோ. சவாரி கிடைத்தால் தான் அவர்களுக்கு சாப்பாடு. ஏழ்மையில் வாழும் குடும்பம்.
கணேசனின் ஆட்டோ உரிமையாளர் மகள் திருமணம். சாரதாவிற்கு அக்கல்யாணத்திற்கு பகட்டாக செல்ல வேண்டும் என்று ஆசை. அதற்கு ஒரு கம்மலாவது வேண்டும் அல்லவா? ஆனால் இங்கே ஒரு கடுக்கனுக்கு கூட வழி இல்லை.
சாரதாவின் பக்கத்து வீட்டு ஜானகி வசதியானவள். சாரதாவிடமும் மிகவும் அன்பாக இருப்பாள். சாரதாவிற்கு அவளிடம் போய் இரவல் கேட்க யோசனை தோன்றியது.
மறுநாள் ஜானகி சாரதாவை தன் அறைக்கு கூட்டிச்சென்று பீரோவில் இருந்து ஒரு பெரிய பெட்டியை எடுத்தாள். அப்பெட்டியில் இருந்து வேண்டிய கம்மலை எடுத்துக்கொள்ள சொன்னாள். ஜானகிக்கு இது கனவா? நனவா? என்று தெரியவில்லை. ஏராளமான கம்மலில் ஒன்று மட்டும் கண்ணைப் பறிக்க அதையே எடுத்துக் கொண்டாள்.
சாரதா அந்த கம்மலை போட்டு அலட்டிய அலட்டலில் ஒரு காது கம்மலைக் காணவில்லை. தலையில் இடி விழுந்தது போல் இருந்தது கணவனுக்கும்,மனைவிக்கும்.
நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு புது ஜோடி கம்மல் வாங்கிக்கொடுத்து விடுவோம் என்று முடிவுக்கு வந்தனர்.ஊரில் உள்ள எல்லா நகைக் கடையிலும் ஏறியிறங்கினர் அதே போல் கம்மலுக்கு. கடைசியில் ஒரு நகைக்கடையில் கண்டு பிடித்தனர் அச்சு அசலாய் அதே போன்று கம்மலை. ஆனால் அது வைரக்கம்மல் விலை80,000 ரூபாய். விழி பிதிங்கிய இருவரும் கடைசியில் 3000ரூபாயை அட்வான்ஸ்சாக கொடுத்துவிட்டு 3 நாட்களில் வாங்கிச் செல்வதாக கூறிவிட்டு வந்தனர்.
தன்னிடம் உள்ள அரை ஏக்கர் நிலத்தை விற்று பத்தாததற்கு உற்றார் உறவினர்களிடம் கடன் பெற்று 3ம் நாள் அந்த கம்மலை வாங்கி ஜானகியிடம் சேர்த்தனர்.
வாங்கிய கடனை அடைக்க இரவு பகலாக உழைத்தனர். நான்கு வருடத்தில் சாரதா அடையாளம் தெரியாமல் கிழவி உருவத்திற்கு மாறினாள்.
ஜானகிக்கு இவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கவே கூப்பிட்டு விசாரித்தாள். என்ன சாரதா இப்படி ஓடாய் தேய்ந்துள்ளாய்? உடல்நிலை சரியில்லையா? என்றுகேட்டாள்.
எல்லாம் உங்களிடம் நான்கு வருடத்திற்கு முன் நான் வாங்கிய வைரக் கம்மலால் தான். அதை நான் தொலைத்துவிட்டேன் அதற்கு பதில் கடன் வாங்கி உங்களுக்கு வேறு ஒன்றை வாங்கித் தந்தேன் என்றாள்.
அதற்கு ஜானகி என்ன? வைரக் கம்மலா? அது 100ரூபாய்க்கு வாங்கிய கவரிங் கம்மல் என்றாள். அடுத்த நொடி சாரதா மயங்கி கீழே விழுந்தாள்.

Comments
Post a Comment