Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

சிவகங்கை மாவட்டம் அர்ச்சுனாபுரத்தில் ராஜவம்சத்தில் பிறந்த ராமலிங்க சேதுபதிக்கும், இந்திராணிக்கும் பிறந்தவர்கள் நல்லதம்பியும், நல்லதங்காளும். இளம் வயதிலேயே பெற்றோர் இறந்ததால் நல்லதம்பி நல்லதங்காளை மிகவும் பாசமாக வளர்த்து, நிறைய சீர்வரிசை செய்து ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை ராஜவம்ச காசிராஜனுக்கு திருமணம் செய்து வைத்தான். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள்.

ராமநாதபுர மாவட்டத்தில் 12 வருடங்களாக மழை இல்லை. பஞ்சம் ஊரில் தலைவிரித்தாடியது. ராஜா காசிராஜனையும் விடவில்லை வறுமை.  வீட்டில் உள்ள பொருள்கள் போக நல்லதங்காள் கொண்டு வந்த சீர்வரிசையான  தங்கம், வைரம், மற்றும் வெள்ளி பாத்திரங்கள் அனைத்தையும் விற்றாயிற்று. குழந்தைகள் பசியால் வாடுவதை பார்க்க முடியவில்லை பொற்றவர்களுக்கு.

அப்போது தான் நல்லதங்காள் காசிராஜனிடம்,"நானும் நம் குழந்தைகளும் என் அண்ணணை பார்த்து வருகிறோம்.  என் அண்ணீ நம் பிள்ளைகளுக்கு விருந்து சமைத்து போடுவாள். நம் ஊரில் முதல் மழை பெய்தவுடன் ஓடி வந்து விடுகிறோம், அனுமதி தாருங்கள்" என்றாள்.

காசிராஜன் அதற்கு சம்மதிக்கவில்லை.
பசியும், பஞ்சமும் வதைத்து இறந்தாலும் நாம் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டாம் என்றான். என் பிறந்த வீட்டில் விருந்துண்பது எப்படி யாசிப்பதற்கு சமமாகும்? என்று சற்று சினந்து கொண்டாள். தன் மனைவி, மற்றும் பிள்ளைகளின் நிலை கண்டு அரைமனதுடன் சம்மதித்தான் காசிராஜன். விடிந்ததும் புறப்பட்டு விட்டனர் நல்லதங்காள் மற்று பிள்ளைகள் பிறந்த ஊரான அர்ச்சுனாபுரம் நோக்கி.

அர்ச்சுனாபுரம் போகும் வழி நெடுகிழும் தம் பிறந்த வீட்டின் பெருமையை பேசிக் கொண்டே வந்தாள் நல்லதங்காள். மாமன் வீட்டில் பாலும், பழமும் வெள்ளித் தட்டில் விருந்தும் சாப்பிடலாம். மாமா உங்களுக்கெல்லாம் புது சொக்கா வாங்கி தருவார். பஞ்சு மெத்தையில் படுத்துறங்கலாம் என்று கூறி பூரிப்போடு வந்து சேர்ந்தால் அர்ச்சுனாபுரத்துக்கு.

அர்ச்சுனாபுரத்தில் அண்ணண் நல்லதம்பி இல்லை அவன் வேட்டைக்கு சென்றுவிட்டான்,  என ஊரார் சொல்ல கேட்டு தெரிந்து கொண்டாள். வீட்டுக்குள் அண்ணீ! அண்ணீ! என்று சந்தோஷ கோஷம் போட்டு கொண்டு வந்தாள். நல்லதங்காளையும் அவள் பிள்ளைகளையும் பார்த்து முகத்தில் ஈயாட வில்லை மூளியழங்காரிக்கு. இவர்களை பார்த்தது தான் தாமதம் அடுப்படியில் செய்து வைத்த பலகாரங்களை ஒளித்து வைத்தாள். தெற்கு மூலையில் தேங்காய் கொட்டி கெடக்கு, மேற்கு மூலையில் மாம்பழம் கொட்டி கெடக்க, அதை ஆசையோடு எடுத்து கடிக்க வந்த பிள்ளையின் கையில் இருந்த பழத்தை வேகமாக தட்டி விட்டாள் மூளியழங்காரி. மேலும் நல்லதங்காளிடம் இன்று வீட்டில் ஒன்றும் சமைக்கவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை வேண்டுமென்றால் பாத்திரம் தருகிறேன் நீயாக சமைத்துக் கொள் என்றாள்.

வீட்டுக்குள் சென்று ஒரு ஓட்ட பானையையும், புழுத்த அரிசியையும், ஈர விரகையும் கொண்டு வந்து கொடுத்தாள். இந்த பொருள்களை வைத்து அரும்பாடு பட்டு சமைத்து முடித்தாள்.

சமைத்த புழுத்த அரிசி சாதத்தை சாப்பிட குழந்தைகளை அழைத்தாள். பிள்ளைகள் எல்லாம் சாப்பிட. அமர்ந்ததும் இல்லாத கோழியை விரட்டும் பாவனையில் சோத்துப் பானையை காலால் தட்டிவிட்டாள் மூளியழங்காரி. சமைத்த உணவு சிதறிக் கிடக்க அதை எடுத்து பிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தன. இதை பார்த்து இதயம் வெடிப்பது போல் இருந்தது நல்லதங்காளுக்கு.

பிள்ளைகளை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் கிணற்றை தேடி. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் தங்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்தனர். அதற்கு நல்லதங்காள் நாங்கள் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள். யாரிடமும் கையேந்த மாட்டோம் என்று சொல்லி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். போகும் வழியில் ஒரு கிணற்றைப் பார்த்தாள். ஒவ்வொரு குழந்தையாக தூக்கி போட்டு இறுதியில் தானும் அதில் குதித்தாள்.

                                                வேட்டைக்கு சென்ற நல்லதம்பி வீடு திரும்பினான், வரும் வழியில்                      நல்லதங்காள் வந்த சேதியை ஊர் மக்கள் சொல்லக் கேட்டு சந்தோஷமாக         வீட்டுக்கு வந்தான். எங்கே என் தங்கை என்று தன் மனைவியிடம் கேட்டான்.     அதற்கு  அவள் எனக்கு தெரியாது, வந்ததும் என்னிடம் சண்டை போட்டு விட்டு எங்கோ சென்று விட்டாள் என்றாள். மனம் கலங்கிய நல்லதம்பி ஊர் மக்களின்  உதவியால் விசயத்தை ஒரு வகையில் புரிந்து கொண்டு நல்லதங்காளை           தேடினான். அப்போது அருகாமையில் ஒரு கிணற்றில் நல்லதங்காளும், அவள் குழந்தைகளும் செத்து மிதப்பதை கேள்விப் பட்டு அங்கு சென்று பார்த்தான்.       அவர்கள் பிணங்களாக மிதப்பதை பார்த்து வாயிலும், வயிற்றிலும் அடித்துக்    
கொண்டு அழுதான்.                                                                                                                        

நேராக வீட்டிற்கு சென்று அங்கு ஒன்றும் அறியாதவள் போல் அமர்ந்திருந்த      மூளியழங்காரியை வெட்டிக் கொன்றான். பிறகு தானும் நல்லதங்காள்               விழுந்த கிணற்றில் குதித்து உயிர் விட்டான்.                                                                    

இப்படி இறந்த நல்லதம்பி, நல்லதங்காள், மற்றும் அவள் பிள்ளைகள் 7 பேரும் கிராம தேவதைகளாக மாறி மக்களுக்கு அருள் பாலிக்கின்றன. நல்லதங்காள்   கோவில்கள் பல கிராமங்களில் இருந்தாலும் அவள் வாழ்ந்து மடிந்த                    சிவகங்கையில் இன்றும் கோயில் மற்றும் அவள் தற்கொலை செய்து                 கொண்ட கிணறு அப்படியே உள்ளது. மக்கள் இங்கும் வந்து வழிபட்டு                 
     செல்கின்றனர்.   
                                                                                                                            

Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி

தங்க ஆபரணங்கள் சேர