ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டி என்னும் அர்த்தத்தில் சொல்லுவர். ஆனால் உண்மையான விளக்கம் என்னவென்றால்.
இந்த ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் அவன் ஆண்டி ஆவான் என்பது தான் பொருள்.
- ஆடம்பரமாக வாழும் தாய்.
- பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.
- ஒழுக்கமற்ற மனைவி.
- ஏமாற்றும், மற்றும் துரோகம் செய்யும் உடன் பிறந்தோர்.
- சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள்.
இந்த ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் அவன் ஆண்டி ஆவான் என்பது தான் பொருள்.
Comments
Post a Comment