How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை
வலம்புரிச் சங்கை வழிபடும் முறை
வலம்புரி சங்கு உருவாகும் விதம்:
கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல்கள் வகை புழுக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம் தான் சங்கு. இதில் சிறிதாகவும், நீளவாக்கிலும் உள்ளது பெண் சங்கு, பெரிதாகவும், தடிமனாகவும் உள்ளது ஆண் சங்கு.சங்குகளின் மேல் உள்ள கோடுகளை வைத்து அது வலம்புரி சங்கா அல்லது இடம்புரி சங்கா என வகைப் படுத்துவர்.
ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு. ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடது புறம் வந்தால் அது இடம்புறிச் சங்கு. இடம்புறிச் சங்கை காட்டிலும் வலம்புரி சங்குதான் அபூர்வமானது. இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப் படுகிறது அதனால் இதற்கு தெய்வீக சக்தி மிக அதிகம்.
வலம்புரி சங்கின் சிறப்பு:
மகா விஷ்ணுவின் இடது கையில் இருப்பது வலம்புரி சங்கு. சங்கை நம் காதில் வைத்தால் "ஓம்" என்னும் பிரணவ ஓசை நமக்கு கேட்கும். வலம்புரி சங்கை வீட்டில், வியாபாரம் பார்க்கும் இடத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம்பெருகும்.வலம்புரி சங்கை வழிபடும் முறை:
சங்கை தரையில் வைக்க கூடாது. இதை பித்தளை அல்லது வெள்ளி தட்டில் தான் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்க கூடாது. தட்டின் மேல் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அதன் மேல் சங்கை வைக்க வேண்டும்.செல்வத்திற்குஅதிதேவதையான மகாலட்சுமி பிறந்த ஆடி மாதம் பூரம் நட்சத்திரம், இந்திரன் லக்ஷ்மியை வணங்கும் புரட்டாசி பௌர்ணமி, ஆனி மாதம் சுக்ல பட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பௌர்ணமியிலும், வலம்புரி சங்கில் பசும் பால் வைத்து சங்கையும், லக்ஷ்மியையும் மலர்களால் அலங்கரித்து, மஞ்சள், குங்குமம் இட்டு அதிரசம், லட்டு போன்ற பிரசாதங்கள் பசு நெயில் தயாரித்து, பசு நெயில் விளக்கு ஏற்றி இரவு 1௦.௦௦ மணியிலிருந்து 1.௦௦ மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் எல்லா வித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணிர் விட்டு அதில் துளசி,வில்வக்கட்டை,ஏலக்காய், பச்சை கற்பூரம், குங்குமம், பூ போன்ற பொருள்கள் வைத்து பூஜை செய்து விட்டு அந்த நீரை சிறிது குடித்துவிட்டு, சிறிது தண்ணீரை வீட்டின் நிலைவாசலில் தெளிக்கவும். இப்படி 9௦ நாள்கள் செய்தால் திருஷ்டி, போட்டி, பொறாமை நீங்கும். வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
Comments
Post a Comment