Gandhamma granny(short story)_காந்தம்மா பாட்டி (சிறு கதை)
காந்தம்மா பாட்டி என்றால் அவ்வூரில் எல்லோருக்கும் மரியாதை. பாட்டிக்கு வயது 73,ஆனாலும் இன்னும் உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்று இறுமாப்போடு பழ வியாபாரம் செய்து வந்தாள்.
பாட்டிக்கு 3 மகன்கள், 2மகள்கள் கணவர் இறந்துவிட்டார். இரண்டாவது மகள் ஒரு பெண் குழந்தையை பெற்றுப் போட்டு இறந்து போனாள். அவள் கணவர் ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை ஆகிவிட்டான். அக்குழந்தையின் பெயர் மீனாட்சி.
எங்கு சுமை நம் மீது விழுந்து விடுமோ என காந்தம்மா பாட்டியை ஓரம் கட்டினார்கள் கிழவி பெற்ற வள்ளாளகண்டன்கள்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் வைராக்கியம் தான் நம் உயிரை வாழ வைக்கும் என்பது பாட்டிக்கு பொருந்திப் போய்விட்டது. தன் பேத்தியை டாக்டருக்கு படிக்க வைக்க முடிவெடுத்து விட்டாள்.
தான் பெற்ற அம்மா இருந்தால் கூட இவ்வளவு மெனக்கெட மாட்டாள் என்னை படிக்க வைக்க என்று தன் தோழிகளிடம் மெச்சுவாள் மீனாட்சி. பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை என்றால் இவள் போவாள் பழவியாபாரத்திற்கு. அன்று நடந்த பாடத்தை தோழிகளிடம் கேட்டு இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பாள்.
மீனாட்சிக்கு மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்தது. அரசு கொடுக்கும் உதவித் தொகை போக, பாட்டி சீதனமாய் கொண்டு வந்த 1ஏக்கர் நிலத்தை விற்று பேத்தியை மருத்துவர் ஆக்கினாள்.
ஊரே கைராசியான மருத்துவர் என புகழ்ந்தனர் மீனாட்சியை. பாட்டியையும்,பேத்தியையும் ஒதுக்கிய உறவுகள் மருத்துவமனை வாசலில் நின்றனர் இலவச வைத்தியம் பார்க்க.

Comments
Post a Comment