சித்தநிலையை எப்படி அடைவது ? நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மிகஅதிகம். இதனால் நம்மில் பலர் சாமியார்ஆகிவிடலாம் என்று கூட நினைப்போம். ஆனால் அது எளிதானகாரியம் அல்ல. ஒரு மனிதன் சித்தநிலையை அடைவது,ஒரே பிறவியில் கிடைக்கும் பாக்கியம் இல்லை. பல பிறவிகளில் அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மங்கள் போன்றவையே அவனை இறைநிலைக்கு அழைத்துச் செல்கிறது. உதாரணமாக புத்தர்ஞானம் பெருவதற்க்கு முன்பாக, அவர் அதற்கு முன்பு எடுத்த முன்னூர் பிறவிகள் அவருக்கு புலப்பட்டதாம். அதே போல் தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம், தவவலிமை ஆகியவை ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடன் சேர்ந்து பிறக்கும். அதனால் அவை அனைத்தும் பல பூட்டுக்களால்,அவனுள்ளே அடைத்து வைக்கப் பட்டிருக்கும். உதரணமாக பண ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை போன்ற எல்லா ஆசைகளும் ஒருவனுக்கு எழும். அவையெல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வரவேண்டும் என்பதற்காக தரப்பட்டவை. அருணகிரிநாதர் முருகப்பெருமானின்அருளை பெறுவதற்கு முன்பாக,பெண் பித்தனாக இருந்தார். அவர் சகோதரிகூறிய ஒரு வார்த்தை அவர் பெண்ஆசையை வெறுக்ககாரணமாக அமைந்தது. பின் மகானாக மாறி முருகப்பெருமானிட...