Ice biryani benefits_ காலை உணவுக்கு ஏற்றது பழையசாதம்
காலை உணவுக்கு ஏற்றது பழைய சாதம்
பழைய சாதத்தில் உள்ள சிறப்பு:
நம் முன்னோர்களும், விவசாயிகளும் விரும்பி சாப்பிட்ட பழைய சாதத்தில்பல நன்மைகள் உள்ளன. பழைய சாதத்தை தொடர்ந்து உண்பதால் நம் உடலில் மெட்டபாலிச இயக்கம் சரியாக உள்ளது என்று அர்த்தம். அதாவது நம் உடலில் இறந்த செல்கள் அதிகம் உள்ளன அதை வெளியேற்றி புதிய செல்களை உருவாக்குவது தான் மெட்டபாலிச இயக்கம். பழைய செல்கள் பலவழிகளில் வெளியேறுகின்றன. புதிய செல்கள் நம் உடல் வலிமையை கூட்டுகின்றன .பழைய சாதத்தை நாம் சாப்பிடும் போது நம் உடலில் புதிய செல்கள் உருவாகுகின்றன.வெளிநாட்டினர் விரும்பி உண்ணும் உணவு:
வெளிநாட்டினர் பழைய சாதத்தை விரும்பி உண்ண ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு நம் உணவின் அருமை தெரிந்து நம் பாரம்பரிய உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். நாம் அவர்களின் உணவான பயனற்ற கெல்லாக்ஸ், ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலை வளர்கிறோம். மேலை நாட்டில் இருந்து அறிமுகமான இந்த வகையான உணவுகளை உண்பதை பெருமையாகவும், நம் ஊரு உணவுகள் உண்பதை கௌரவ குறைவாகவும் நினைக்கிறோம்.காலை உணவாக பழைய சாதத்தை எடுத்துக்கொள்வது மிக, மிக நல்லது. இதை நம் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்த வேண்டும். இதனால் சளி பிடிக்கும் என்று சிலர் நினைப்பர். ஆனால் அப்படி இல்லை, தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் எந்த பாதிப்பும் வராது.
இதில் மோர் உற்றியோ, அல்லது நல்லெண்ணெய் உற்றியோ உப்பு சேர்த்து சாப்பிடலாம். இதற்கு துவையல், வெங்காயம். மோர் மிளகாய் , ஊருகாய் போன்றவை சிறப்பாக இருக்கும்.
Comments
Post a Comment