Colocasia/Seppankizhangu Fry_சேப்பங்கிழங்கு வறுவல்
சேப்பங்கிழங்கு வறுவல்
என் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் இந்த சேப்பங்கிழங்கு வறுவல் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் செய்முறை மிகவும் எளிது, ஆனால் சுவையோ மிகவும் அபாரமாக இருக்கும். சாதாரணமாக நாம் வீட்டில் வைக்கும் குழம்புக்கும், அல்லது கலந்த சாதங்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.தேவையானபொருள்கள்:
சேப்பங்கிழங்கு : 1/2 கிலோதேங்காய் துருவல் : சிறிது
சோம்பு : 1 ஸ்பூன்
மிளகாய்வத்தல் : 7
வெள்ளைபூண்டு : 1௦ பல்
எண்ணெய் : பொரிக்க தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
செய்முறை :

சேப்பங்கிழங்கை கழுவி குக்கரில் 1 விசில் விடவும், 1 விசில் போதுமானது ஏனெனில் அதிகம் வெந்தால் சேப்பங்கிழங்கு சரியாக பொரியாது. வேகவைத்த கிழங்குகளை தோல் நீக்கி நீளமாக நறுக்கி கொள்ளவும். பிறகு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, வத்தல், பூண்டு இவைகளை அரைத்துக் கொள்ளவும்.
பொரித்த எண்ணையிலேயே அரைத்த விழுதை கொட்டி லேசாகவதக்கி பிறகு அதனுடன் கிழங்கை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து வதக்கவும்.
மிதமான சூட்டில் 7 நிமிடம் வறுத்து இருக்கவும். சிறிது நேரத்திலேயே வறுவல் மொருமொரு என்று வந்துவிடும். இப்போது சேப்பங்கிழங்கு வறுவல் தயார். சாதாரண உணவையும் விருந்தாக்கும் இந்த சேப்பங்கிழங்கு வறுவல்.
Comments
Post a Comment