Madurai Mutton Chukka!__மதுரை மட்டன் சுக்கா!
மதுரை மட்டன் சுக்கா:
செய்வதற்கு மிகவும் எளிமையாகவும், மிகவும் சுவையானதாகவும் இருக்கும் இந்த மதுரை மட்டன் சுக்கா.
தேவையான பொருள்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பூண்டு - 8 பல்
இஞ்சி - சிறிது
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
தாளிக்க:
சோம்பு சிறிது
மிளகாய் வத்தல் 2
செய்முறை:
பூண்டு, இஞ்சி, மிளகாய் தூள், சீரகத்தூள் அனைத்தையும் வழுவழுப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் ஒரு குழிக் கரண்டி எண்ணை ஊற்றி சோம்பு, பட்ட மிளகாய் தாளித்து அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரை கிலோ மட்டனையும் சேர்த்து வதக்க வேண்டும் . தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மட்டன் வேக 5 விசில் குக்கரில் வைக்கவும். மட்டன் வேந்ததும் தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி எண்ணை பிரியும் தருவாயில் அடுப்பை அணைக்கவும். சுவையான மதுரை மட்டன் சுக்கா தயார்.
Comments
Post a Comment