How to remove pesticides from vegetables?__ரசாயன மருந்துகளை எளிய முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து நீக்கும் வழி
ரசாயன மருந்தை காய்கறி மற்றும் பழங்களில் இருந்து எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம்:
நாம் அன்றாடம் உண்ணும் காய் மற்றும் கனிகளில் ஏராளமான பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கின்றனர். இதனால் நம் உடலில் சாதாரண தொற்று முதல் புற்றுநோய் வரை அனைத்து வகையான நோய்களும் வர வழிவகை செய்கின்றன.
இந்த பூச்சி கொல்லி மருந்தை நீக்க மிக எளிய வழி ஒன்று உள்ளது. அதற்கு தேவை கல்உப்பு மற்றும் மஞ்சள்தூள்.
காய்கறி மற்றும் பழங்களை கழுவும் முறை:
நாம் என்ன என்ன காய்கறிகளை சமைக்கப் போகிறோமோ அந்த காய்கள் அனைத்தையும் ஒரு சட்டியில் போட்டு அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சிறிது கல்உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். பதினைந்து நிமிடம் கழித்து அவைகளை நன்கு தேய்த்து கழுவி சமைக்கவும். இதே முறையில் பழங்களையும் கழுவலாம். இவ்வாறு கழுவி சாப்பிடும் பொருள்களே ஆரோக்கியமானது.
Comments
Post a Comment