புரட்டாசி மாதம் ஏன் அசைவம் கூடாது(அறிவியல் விளக்கம்):
புரட்டாசி மாதம் ஏன் அசைவம் கூடாது :
புரட்டாசி மாதம் நம்மில் பெருவாரியான மக்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது இல்லை. இதற்கு ஆன்மீகக் காரணங்கள் இருந்தாலும், சில அறிவியல் காரணங்களும் உள்ளன. இதை நாம் உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் இதற்கு ஆன்மீக காரணத்தை பிரதானமாகக் கூறியுள்ளனர்.
அறிவியல் காரணம்:
பொதுவாக தமிழ் மாதங்களான ஆடி மற்றும் ஆவணியை காற்றடி காலம் என்பர். அதே போல் பங்குனி மற்றும் சித்திரை மாதத்தை வெயில் காலம் என்பர். ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதத்தை மழைக் காலம் என்பர். இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சீதோஷண நிலையை நமக்கு உணர்த்தும்.
ஆனால் இந்த புரட்டாசி மாதம் மட்டும் சீதோஷண நிலை சீராக இருக்காது. இம்மாதம் விழும் மழைத் தூரலினால் உண்டாகும் உஷ்ணம் வெயில் காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை விட மிகக் கடுமையானது. இப்படி உஷ்ணமாக இருக்கும் நம் உடல் அசைவ உணவை ஜுரணித்துக் கொள்ளுமா? ஜுரணிக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவம் தவிர்க்க வழியுறுத்தி உள்ளனர்.
Comments
Post a Comment