ஒருவரின் பசியை போக்கும் அன்னதானமே சிறந்தது என்பர் சிலர். ஆனால் தானத்தில் சிறந்தது கன்னிகா தானம்தான்.சாஸ்திரங்களும் இதை மஹா தானம் என்கின்றன. திருமணத்தின் போது ஒரு தந்தை தன் மகளை, வேறு குடும்பத்தில் பிறந்த ஒரு ஆண் மகனுக்கு தானமாக கொடுப்பதே கன்னிகா தானம் என்பர். எல்லா தானத்திலும் இது சிறந்தது என்று சொல்ல இந்த நிகழ்வின் போது சொல்ல படுகிற மந்திரங்களும், சங்கல்ப்பங்களுமே சாட்சி. "தசானாம்பூர்வேஷம்,தசானாம்பரேஷாம், மமஆத்மனஸ்ஸ ஏகவிம்சதிகுல உத்தாரண....." என்று அந்த மந்திரம் நீள்கிறது. அதாவது, கன்னிகாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்துமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்னிகாதானம் செய்பவனும் ஆஹ, இருபத்தோரு தலைமுறையும் கரைசேர இந்த தானத்தை செய்கிறேன், என்று பொருள் வரும். உன் வம்சவிருத்திக்காக, என் குலவிளக்கை உனக்கு தானமாகத் தருகிறேன் என்று பொருள் படும் கன்னிகாதானமே உலகில் மிகச்சிறந்த தானமாகும். ஒரு பெண் பிள்ளையைப் பெற்று அவளை கண்ணனுக்கு கண்ணாக வளர்த்து, மற்றொருவனிடம் வம்சவிருதிக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் இருபத்தோரு தலைமுறையும் கரையேற...
Comments
Post a Comment