Shri Bogar Siddha__ஸ்ரீ போகர் சித்தர்
போகர் சித்தரின் மூலமந்திரம்:
போகர் பற்றிய சில தகவல்கள்:
போகர் ஆகாயப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இளம் வயதில் இறந்த இளைஞனின் மனைவி அழுது கொண்டிருந்தாள். அவளது விதவைக் கோலம் போகரை மிகவும் பாதித்தது. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகில் இருக்கும் நவநாத சித்தரின் சமாதியை அடைந்தார்.
நவநாத சித்தர் அவருக்கு காட்சி அளித்தார். போகரும் சஞ்சீவினி மந்திர வித்தையை கற்றுத் தருமாறு அவர்களிடம் கேட்டார்.
போகா! இந்த மக்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்ன தான் துன்பம் வந்தாலும் திருந்தி வாழார். அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மீண்டும் பிறப்பார்கள். நீ போய் உன் தவத்தை மேற்க்கொள் போ! என்றார்.
ஆனால், போகர் திரும்பவும் மந்திரத்தை கற்றுத் தருமாறு வற்புறுத்தினார். நவநாத சித்தர்கள் பொறுமையிழந்து கோபமாக போகா! தெய்வ நியதிக்கு எதிராக நீ செயல் படுகிறாய். நீ கற்றுக் கொண்ட வித்தைகளால் தெய்வ நிந்தனைகள் தான் அதிகமாகும் எனவே நீ கற்றுக் கொண்டது எல்லாமே உனக்கு மறந்து போய்விடும்......
முத்தீயும் மிகுவாய் எழட்டும்.... போ என்று சாபமிட்டார்.
போகரோ, உலக மக்களின் நலன் பொருட்டு நான் பாடுபட்டது இதற்குத் தானா? அப்படி என்றால் நான் இங்கேயே மாண்டு போகிறேன், என்று கூறினார்.
அவரைத் தடுத்த நவநாத சித்தர் " ஏராளமான காயகல்ப முறையை நீ அறிந்து இறந்து போனால் அது உலக மக்களுக்கும், சித்தர்கள் உலகுக்கும் பேரிழப்புதான். எனவே தகுதி உள்ளவர்களுக்கு காயகல்ப முறையை சொல்லிக் கொடு இதனால் அவர்களை நீண்ட காலம் வாழவை" என்றார்.
மாண்டவர்களுக்காக மனதை குழப்பிக் கொள்ளாதே என்றார்.
"சாபம்"? என்றார் போகர். இந்த சாபத்தால் உனக்கும், உலக மக்களுக்கும் நன்மையே ஏற்படும் என்று கூறி மறைந்தார். அதன் பிறகு போகர் காயகல்ப முறையை பல பேருக்கு கற்பித்து பயன் அடையச் செய்தார்.
பழனியில் இருக்கும் முருகன் சிலை போகரால் ஒன்பது வகையான மூலிகைகளைக் கொண்டு செய்யப் பட்ட நவபாஷன சிலையாகும். பழனி கோவிலிலேயே தியானத்தில் அமர்ந்து போகர் ஜீவ சமாதி அடைந்தார். இன்றும் நாம் பழனியாண்டவர் சன்னதியில் போகரின் ஜீவ சாமாதியை காணலாம்.
பழனியில் இருக்கும் முருகன் சிலை போகரால் ஒன்பது வகையான மூலிகைகளைக் கொண்டு செய்யப் பட்ட நவபாஷன சிலையாகும். பழனி கோவிலிலேயே தியானத்தில் அமர்ந்து போகர் ஜீவ சமாதி அடைந்தார். இன்றும் நாம் பழனியாண்டவர் சன்னதியில் போகரின் ஜீவ சாமாதியை காணலாம்.
Comments
Post a Comment