Want black hair?Read this!_முடி கருமையாக வளர கருவேப்பிலையின் பங்கு
முடி கருமையாக வளர கருவேப்பிலையின் பங்கு
நம் அனைவருக்குமே முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு கருவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது. எனக்குத் தெரிந்த சில முறைகளில் கருவேப்பிலையை பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்.
1. கருவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 100 கிராம் அளவு தேங்காய் எண்ணையோடு லேசாக சூடு படுத்தவும், எண்ணை கொதித்து விடக் கூடாது. இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்றாகவும், கருமையாகவும் வளரும்.
2. கருவேப்பிலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வரலாம்.
3. வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதை கருவேப்பிலையுடன் அரைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளைஞர்களுக்கு இளநரை பிரச்சனை அண்டாது.
Comments
Post a Comment