Posts

Showing posts from October, 2018

தங்க ஆபரணங்கள் சேர

Image
பொதுவாக தங்க ஆபரணங்களை சுக்ர ஓரையில் வாங்கி வந்து அதை நம் வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டு எடுக்கவேண்டும். மேலும் ஆபரணங்கள் சேர இரண்டு சக்திவாய்ந்த மந்திரம் உள்ளன, அவைகளை பூஜை நேரத்தில் பாராயணம் செய்து வந்தால் வீட்டில் தங்கம் சேரும். முதல் மந்திரம் : ------------------------- ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி வசம் வா வசம் வா ஸ்ரீம் மம தநூகர புவாய நமோ நம இரண்டாம் மந்திரம் : --------------------------------- ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் சொர்ண ஆக்ராஷன தேவ்யை இரட்சிப்பாய் இம்மந்திரங்களை நாள் தோரும் பாராயணம்  செய்து சொர்ண லெட்சுமியை ஆராதனை செய்ய வேண்டும்.

Flax seeds tea__ஆலிவ் விதை டீ

Image
நாம் காலையில் வெறும் வயிற்றில் பால் டீ மற்றும் காபி குடிப்பதை காட்டிலும் ஆலிவ் விதை டீ உடலுக்கு மிகவும் நல்லது, செய்முறையும் சுலபம். தேவையான பொருள்கள்: --------------------- ---—-------------- ஆலிவ் விதை           - 1 கப் சீரகம்                           - 1 கப் மிளகு                           - 1/2 கப் சுக்கு                             - 50 கிராம் ஆவாரம்பூ                   -  சிறிது கருப்பட்டி                     -  சிறிது இதில் சுக்கை லேசாக அம்மியில் தட்டி அனைத்து பொருள்களையும் மிக்சியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லிட்டர் தண்ணீர்  ஊற்றி கொதிக்கவிட்டு அதில் இந்த அரைத்து வைத்த பொடியையும், சிறிது ஆவாரம் ப...

Disadvantages of Non stick utensils_உமிழும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்

Image
நாம் இன்று வேலை சுலபமாவற்கும், எண்ணையை குறைவாக ஊற்றி சமைப்பதற்கும் நான் ஸ்டிக் எனப்படும் உணவு சட்டியில் ஒட்டாத பாத்திரத்தை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை எல்லோரும் அறிய வாய்ப்பில்லை. இவ்வகையான பாத்திரத்தில் சின்தடிக் பூச்சை பூசுகின்றன, இந்த பூச்சு பிளாஸ்டிக் பாலிமர்ஆல் உருவாக்கப் பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்பட்ட இப்பாத்திரத்தில் 450 டிகிரி வெப்பத்தில் சமைக்கும் போது அந்த ரசாயன பூச்சு உணவில் கலக்கிறது. அந்த உணவை நாம் சாப்பிடும் போது புற்றுநோய், மற்றும் குழந்தை பிறப்பில் பிரச்சினை வர அதிக வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல கணைய, கல்லீரல் பாதிப்பு உண்டாவதுடன், தொடர் இருமல்,  காய்ச்சல் போன்ற உபாதையை கொண்டு வரும். எனவே நாம் நான் ஸ்டிக் பாத்திரங்களை தவிர்த்து மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை சமைக்க பயன்படுத்துவோம்.

Healthy sathumavu dosa_சுவையான சத்துமாவு தோசை

Image
பொங்கல், தோசை,  இட்லி என்று சாப்பிட்டு ருசி கண்ட நமக்கு சிறு தானியங்களான கம்பு, கேப்பை போன்றவைகளை சாப்பிட கஷ்டமாகத் தான் இருக்கும். சிறு தானியங்களையும் நாமும், நம் வீட்டு குழந்தைகளும் விரும்பி சாப்பிட நமக்கு பிடித்தமான தோசை வடிவிலேயே செய்து சாப்பிடலாம். குழந்தைகளை சாப்பிட வைக்க அவர்கள் பள்ளி முடிந்து பசியோடு வரும் வேளையில் இந்த சத்துமாவு தோசையை செய்து கொடுத்தால் அவர்களும் சிறு தானிய உணவுக்கு பழக்கமாகி விடுவார்கள். அதன் செய்முறையை பார்ப்போம். தேவையான பொருள்கள்: ---------------------- --------------------- கம்பு                  - 1 கப் கேப்பை            - 1 கப் வரகு அரிசி      - 1 கப் சோளம்              - 1 கப் பாசி பயறு         - 1/2 கப் சீரகம்                  -  1/2 ஸ்பூன் சோம்பு                - 1/2 ஸ்பூன் மிளகு       ...

Avoid cancer_புற்றுக்கு வைப்போம் ஒரு முற்று

நாம் சிறு வயதில் இருக்கும் போது நாம் வசிக்கும் தெருவிலோ அல்லது சந்திலோ யாருக்காவது இந்த புற்று நோய்  கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்போம். ஏனென்றால் அப்போதுது அந்நோய் அந்த காலத்தில் பரவலாக யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று நம் குடும்பத்தார், நம் நெருங்கிய நண்பர் என்று யாரையும் இந்நோய் விட்டு வைக்கவில்லை. இந்நோய் பாதித்தவர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தார் படும் கஷ்டம் ஏராளம். மனதளவிலும் உடலளவிலும் ஏற்படுத்தும் தாக்கம் சுனாமியைவிட மோசமானது. இதற்கு நம் வாழ்கை முறை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நோய்க்கு தீர்வு தான் என்ன? எனக்கு தற்செயலாக Dr.ஜெபசீலன் அவர்களின் ஒலிபதிவு ஒன்று கிடைத்தது, அத்தனை மதிப்பான, அனைவருக்கும் அவசியமான பேச்சு.

Coriander chutney _கறிவேப்பிலை சட்னி

Image
கறிவேப்பிலை சட்னியில் நிறைய சத்துக்கள் உள்ளன. இச்சட்னி கம்பு தோசை, சத்து மாவு சோசை, இட்லி போன்றவைக்கு சரியான மேட்ச். தேவையான பொருள்கள் : ---------------------  --------------------- கறிவேப்பிலை          - 4 கைபிடி அளவு தேங்காய்                     - 1/4 முடி பூண்டு                           - 7 பல் சிவப்பு வத்தல்            - 5 புளி                                 - சிறிது பெருங்காயம்              - சிறிது உப்பு                               - தேவைக்கேற்ப மேலே கூறிய பொருள்கள் அனைத்தையும் பச்சையாகவே அரைத்து ஏதாவது டிபன் உடன் தொட்டு சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.

Marudhani benefits _மங்களகரமான மருதாணி

Image
அம்பிகைக்கு மிகவும் பிடித்தது மருதாணி.  பெண்கள் மருதாணி இட்டுக் கொண்ட கைகளுடன் பூஜை செய்தால் அம்பாள் உள்ளம் மகிழ்வாள். மேலும் மருதாணிக்கும் இராமாயணத்திற்கும் ஒரு சிறு தொடர்புண்டு. இராமன் இராவணனை வதைத்து சீதையை மீட்டுக் கொண்டு போக வருகையில் சீதை இராமனிடத்தில்,"இங்கு நான் வந்த நாள் முதல் என் கஷ்டங்கள் அனைத்தையும் இந்த மருதாணி செடியிடம் தான் கூறுவேன்." அச்செடியும் என் கஷ்டங்கள் அனைத்தையும் காது கொடுத்து கேட்கும். இதனால் என் பாரம் சிறிது குறைந்து, நான் உயிர் வாழவும் ஒரு காரணமாக அமைந்த இந்த மருதாணிக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினாள். அதற்கு இராமனும் சம்மதிக்கவே "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டாள். அதற்கு மருதாணி "உங்கள் முகத்தில் இப்பொழுது தான் நான் மகிழ்ச்சியை பார்க்கிறேன், இம்மகிழ்ச்சி தங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் ,அது ஒன்றே எனக்கு போதும்" என்றது. இதில் மனம் குளிர்ந்த சீதை ஒரு வரத்தை மருதாணிக்கு அளித்தாள்,"யார் உன்னை இட்டுக் கொள்கிறார்களோ அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியும்," "சௌபாக்கியமும் நிலைத்து நிற்கும்...

Copper utensils benefits _செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

Image
பொதுவாக நம் உடலுக்கு செம்பு சத்து தேவை, இதை நாம் செம்பு பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் எளிதில் பெறலாம். தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செம்பு பாத்திரத்தரத்தில் தண்ணீர் பருகிவந்தால் இந்நோய் முற்றிலும் குணமாகும். ஏனென்றால் தைராய்டு நோய் செம்பு சத்து குறைபாட்டால் உண்டாகிறது. இதில் தண்ணீர் ஊற்றி வைத்து பயன்படுத்துவதால் தண்ணீரில் உள்ள கிருமிகள் அழிகின்றன. மேலும் செம்பு பாத்திரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் சரியாகும். இரத்த சோகையை வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை உற்பத்தி ஆக்குவதன் மூலம் குணமாக்கும். புற்று நோய்க்கு சிறந்த நிவாரணி இப்பயன்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! கர்பிணிப்பெண்கள் அலட்சியப் படுத்தாமல் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகி வந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் செம்பு சத்து கிடைக்கும். நாம் அனைவரும் நம் முன்னோர்கள் வழியில் முடிந்தவரையில் மற்ற உலோகங்களை தவிர்த்து செம்பு பாத்திரங்களை பயன்படுத்துவோம்.

குலதெய்வம் துணை இருக்க

Image
நாம் எந்த செயலை செய்வதானாலும் அதற்கு குலதெய்வ அருள் வேண்டும். நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வத்தை வழிபட்டு விட்டுத் தான் மற்ற கோவில்களுக்கும் செல்ல வேண்டும். நம் குலதெய்வக் கோவிலுக்கு மாதத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும். தினமும் நாம் வீட்டில் ஏற்றும் விளக்கு குலதெய்வத்துக்கு தான். நம் முன்னோர்கள் அனைவரும் குலதெய்வத்துக்குள் ஐக்கியம் என்பது நம்பிக்கை. சரி, இப்போது நாம் வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் இருந்தாலும் சரி நம் குலதெய்வம் நம் துணை நிற்க ஒரு எளிய பரிகாரம் உள்ளது. அதற்கு ஒரு சிவப்பு துணி ஒரு எலுமிச்சை குலதெய்வ கோயில் விபூதி, குங்குமம், மஞ்சள் சிறிது கல் உப்பு கருப்பு நூல் ஒரு சிவப்பு துணியில் மேல் சொன்ன பொருள்களை வைத்து கருப்பு நூள் கொண்டு நம் வீட்டு நிலை வாசலுக்கு உள்பக்கமாக( பரிகார மூட்டை வீட்டுக்குள் இருக்க வேண்டும், வெளிபுறம் அல்ல) அந்த கருப்பு நூள் கொண்டு கட்டிவிட வேண்டும். எந்த எதிர் வினையும் வீட்டுக்குள் அண்டாது. நம் மனமும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கும்.

Banana leaf benefits_வாழை இலையில் சாப்பிடுவதன் பயன்கள்

Image
வாழையிலையில் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். சிலருக்கு இளம் வயதிலேயே இளநரை ஏற்படும், அவ்வாறு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து வாழையிலையில் சாப்பிட வேண்டும். வாழையிலை உணவில் உள்ள நச்சுக்களை அழிக்கும். சருமம் பளபளப்பாகும். இதில் உள்ள குளோரோபில் உணவை எளிதில் சீரணமாக்கும். சூடாக எந்த உணவானாலும் வாழையிலையில் வைத்து சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். ஆயுளையும் நீட்டிக்கும்.

Lemon benefits _எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

Image
எலுமிச்சையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இதில் வைட்டமின் C, வைட்டமின் B6, காப்பர், புரோட்டின், பொட்டாசியம், மற்றும் இரும்புசத்து நிறைந்துள்ளது. எலுமிச்சை புத்துணர்ச்சி தரக்கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்தும், மலச்சிக்கல் வராமல் தடுக்கும், தலைவலி குணமாகும், பல் வலியுள்ளவர்கள் சுடுநீரில் எலுமிச்சையை பிழிந்து வாய் கொப்பளித்தால் பல் வலி சரியாகும். எலுமிச்சை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சை வெளியேற்றும். வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

Paanagam benefits _பானகம் பயன்கள்

Image
பானகம் இது அனைவரும் விரும்பும் ஒரு பானம். வைணவக் கோயில்களில் இறைவனுக்கு பிடித்த பிரசாதமாக வழங்கப்படுகிறது. பானகம் உடல் சோர்வை விரட்டக்கூடியது. இதில் சேர்க்கப்படும் அனைத்து பொருள்களும் உடலுக்கு நன்மைபயக்கும். இதை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். தேவையா பொருள்கள்   : ---------------------------------------- தண்ணீர்          - 6 கப் வெல்லம்          -  1 கப் ஏலக்காய்          - 1/2 ஸ்பூன் சுக்கு பொடி      - 1/2 ஸ்பூன் எலுமிச்சை        - 1 தண்ணீரில் வெல்லம் போட்டு கரைத்து அதில் ஏலக்காய் மற்றும் சுக்குதூள்களை போட்டு 1 எலுமிச்சம் பழம் பிழிந்து வடிகட்டி துளசி இலைகளை போட்டு பருகலாம். வெய்யில் காலங்களில் இது நம் உடல் உஷ்ணத்திற்கு ஏற்ற பானமாகும். வெளிநாட்டு குளிர்பானங்கள் நம் உடலுக்கு கேடு விளைவிப்பதால் அவைகளை தவிர்த்து நம் பாரம்பரிய பானங்களை பருகுவோம்.

கோரைப் பாய்

Image
பாய் போட்டு படுத்தால் நோய்விட்டு போகும் என்று பெரியோர் சொல்வர். அது மிகவும் உண்மை. பிறந்த குழந்தையை பாயில் படுக்க வைப்பதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நேராகிறது. குழந்தை வளர்ந்த பின்பும் கூன் போடாது. கர்ப்பிணிகள் பாயில் படுத்து எழுவதால் குழந்தை பிறப்பு எளிதாகிறது. பாய் நம் உடல் சூட்டை உள்வாங்கிக் கொள்கிறது. பாய்விரித்து படுப்பதால் மூட்டு வலி, முழங்கால் வலி வராது. உடல் சோர்வும் சரியாகும். மற்றும் மெத்தையில் உறங்குவதால் மேலே சொன்ன அனைத்து உபத்திரவமும் ஏற்பட வாய்ப்புண்டு.

Oats soup_ஓட்ஸ் சூப்

Image
காலை வேளையில் அவசமாக ஓட்ஸ் சாப்பிட்டு செல்பவர்கள் பலர் உண்டு. இதையே சூப்பாக செய்து சாப்பிட்டால் சுவையும் நன்றாக இருக்கும் காய்கறிகள் சேர்த்து செய்வதால் ஆரோக்கியமும் அதிகம். தேவையான பொருள்கள்: --------------------------------------------- ஓட்ஸ்                    -3ஸ்பூன் பிரிஞ்சி இலை  -1ஸ்பூன் சோம்பு                  -சிறிது சீரகம்                     -சிறிது காய்கறிகள்         -1கிண்ணம் உப்பு நெய் செய்முறை  : வாணலியில் நெய்விட்டு பிரிஞ்சி இலை, சோம்பு மற்றும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.  ஓட்ஸ்சை மிக்சி ஜாரில் பொடி செய்து அதையும், நறுக்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Herbal shampoo _ஹேர்பல் சாம்ப்பு

இன்றைய அவசர உலகில் நாம் அனைவரும் சீயக்காய்க்கு பதில் சாம்ப்பூவை பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் சேர்க்கப்படும் ரசாயனத்தால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க நாம் வீட்டிலேயே சாம்ப்பு தயாரிக்கலாம். இதனால் முடி நன்கு வளர்வதுடன் உடல் நலத்திற்கும் நல்லது. இதற்கு தேவையான பொருள்களைப் பார்ப்போம். பூந்திக் கொட்டை    - 500 கிராம் சீயக்காய்                   - 200 கிராம் வெந்தயம்                  - 200 கிராம் பாசிபயறு                  -  200 கிராம் காய்ந்த செம்பருத்தி- 100கிராம் இவைகளை காயவைத்து மிசினிலோ அல்லது மிக்சியிலோ அரைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டால் 4 மாதம் வரும். தேவையான பொழுது 2 ஸ்பூன் எடுத்து 250மில்லி தண்ணீரில் ஊற்றி 150 மில்லியாக வர கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துவைத்து 3 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.