நாம் எந்த செயலை செய்வதானாலும் அதற்கு குலதெய்வ அருள் வேண்டும். நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வத்தை வழிபட்டு விட்டுத் தான் மற்ற கோவில்களுக்கும் செல்ல வேண்டும். நம் குலதெய்வக் கோவிலுக்கு மாதத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும். தினமும் நாம் வீட்டில் ஏற்றும் விளக்கு குலதெய்வத்துக்கு தான். நம் முன்னோர்கள் அனைவரும் குலதெய்வத்துக்குள் ஐக்கியம் என்பது நம்பிக்கை. சரி, இப்போது நாம் வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் இருந்தாலும் சரி நம் குலதெய்வம் நம் துணை நிற்க ஒரு எளிய பரிகாரம் உள்ளது. அதற்கு
ஒரு சிவப்பு துணி
ஒரு எலுமிச்சை
குலதெய்வ கோயில் விபூதி, குங்குமம், மஞ்சள்
சிறிது கல் உப்பு
கருப்பு நூல்
ஒரு சிவப்பு துணியில் மேல் சொன்ன பொருள்களை வைத்து கருப்பு நூள் கொண்டு நம் வீட்டு நிலை வாசலுக்கு உள்பக்கமாக( பரிகார மூட்டை வீட்டுக்குள் இருக்க வேண்டும், வெளிபுறம் அல்ல) அந்த கருப்பு நூள் கொண்டு கட்டிவிட வேண்டும். எந்த எதிர் வினையும் வீட்டுக்குள் அண்டாது. நம் மனமும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கும்.
Comments
Post a Comment