Marudhani benefits _மங்களகரமான மருதாணி
அம்பிகைக்கு மிகவும் பிடித்தது மருதாணி. பெண்கள் மருதாணி இட்டுக் கொண்ட கைகளுடன் பூஜை செய்தால் அம்பாள் உள்ளம் மகிழ்வாள். மேலும் மருதாணிக்கும் இராமாயணத்திற்கும் ஒரு சிறு தொடர்புண்டு.
இராமன் இராவணனை வதைத்து சீதையை மீட்டுக் கொண்டு போக வருகையில் சீதை இராமனிடத்தில்,"இங்கு நான் வந்த நாள் முதல் என் கஷ்டங்கள் அனைத்தையும் இந்த மருதாணி செடியிடம் தான் கூறுவேன்." அச்செடியும் என் கஷ்டங்கள் அனைத்தையும் காது கொடுத்து கேட்கும். இதனால் என் பாரம் சிறிது குறைந்து, நான் உயிர் வாழவும் ஒரு காரணமாக அமைந்த இந்த மருதாணிக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினாள். அதற்கு இராமனும் சம்மதிக்கவே "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டாள்.
அதற்கு மருதாணி "உங்கள் முகத்தில் இப்பொழுது தான் நான் மகிழ்ச்சியை பார்க்கிறேன், இம்மகிழ்ச்சி தங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் ,அது
ஒன்றே எனக்கு போதும்" என்றது.
இதில் மனம் குளிர்ந்த சீதை ஒரு வரத்தை மருதாணிக்கு அளித்தாள்,"யார் உன்னை இட்டுக் கொள்கிறார்களோ அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியும்," "சௌபாக்கியமும் நிலைத்து நிற்கும்" என்று வரம் கொடுத்தாள். எனவே நாமும் விழா மற்றும் பண்டிகைகளுக்கு மருதாணியிட்டு அம்பிகையின் அருள் பெறுவோம்.
அது மட்டுமின்றி அறிவியல் பூர்வமாக பார்த்தால் மருதாணி இட்டுக் கொண்டால் உடல் குளிர்ச்சியாகும், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு உடனடியாக மன அழுத்தம் குறைந்து மனத்தெளிர்ச்சி உண்டாகும்.
மருதாணி செடியை வீட்டு வாசலில் வைத்தால் எதிர்மறை ஆற்றல் உள்ளே வராது.

Comments
Post a Comment