Relief from inferiority complex...Here are some tips!_தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
- உங்களால் இது முடியாது, இது உங்களுக்கு தெரியாது என்று யாராவது சொன்னால் அதை விரைந்து கற்றுக்கொள்ளுங்கள். முடியாததை செய்து காட்டுங்கள்.
- நீங்கள்அழகாக இருகிறீர்கள் என்று முதலில் நம்புங்கள். அழகுக்கும் நிறத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் என்ன சொன்னாலும் உங்களை மட்டமாக பேசினாலும் நீங்கள் அழகு என்று முதலில் நம்புங்கள்.
- மற்ற மொழிகளை சரளமாக பேச முடியவில்லையே என்று கவலை கொள்ளதீர்கள். எல்லாம் வசமாகும், முதலில் தெரிந்த தாய் மொழியிலேயே தைரியமாகவும், சரளமாகவும் பேசுங்கள். இங்கு பலபேருக்கு தாய் மொழியே சரளமாக பேச வராது.
- என் வாழ்க்கை சோகமயமானது என்று எண்ணாதீர்கள். எந்த கவலையும் இல்லாத முழுமையான வாழ்கை இங்கு யாரும் வாழவில்லை. அனைவருக்கும் கஷ்டங்கள் உள்ளன அதை எதிர்கொள்ளுவதில் தான் நம் திறமை உள்ளது.
- உங்களுக்கு எதுவும் தெரியாது எதிரில் இருபவர்க்கு எல்லாம் தெரியும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். அப்படி நினைத்தால் நீங்கள் சொல்லவந்ததை முழுமையாக சொல்லமுடியாது.
- எல்லா விஷயங்களுக்கும் மொழி புலமை அவசியம் என்று எண்ணம் கொள்ளதீர்கள். இங்கு பலபேர் மொழிப்புலமை இல்லாமல் தன் செயலினால் வெற்றி பெற்றவர்கள்.
- அழும் போது தனிமையில் அழுங்கள். நீங்கள் அழும்போது சேர்ந்து அழுகவோ, கண்ணீரை துடைக்கவோ இங்கு யாரும் வரப்போவது இல்லை. கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன்னேறிச் செல்லுங்கள்.
- உங்கள் அன்பு எங்கு நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கு இல்லை,உங்களை நிராகரிதவற்குத் தான் என்று நம்புங்கள்.
Comments
Post a Comment