Beetroot Rasam!_ஆரோக்கிமான பீட்ரூட் ரசம்....
பீட்ரூட்டின் நன்மைகள்:
- இரத்த சோகைக்கு ஏற்றது.
- மன அழுத்தம் குறையும்.
- நிம்மதியான துக்கம் கிடைக்கும்.
- இரத்த கொதிப்பு கட்டுப்படும்.
- இதயத்திற்கு ஏற்றது.
(4 பேர் உண்ணும் அளவு)
தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் சிறிய அளவு -1
- புளி - சிறிது
- தக்காளி - 1
- மஞ்சள்தூள் - சிறிது
- ரசப்பொடி - 1 தேகரண்டி
- பெருங்காயம் - சிறிது
- பூண்டு - 4 பல்
- பச்சைமிளகாய் - 2
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு, உ.பருப்பு - சிறிது
பீட்ரூட்டை சிறிது சிறிதாக நறுக்கி ஆவியில் நன்கு வேகவிடவும். பிறகு வேகவைத்த பீட்ரூட்டை சிறிது புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வழக்கமாக ரசம் தாளிப்பது போல் தாளித்து அரைத்த பீட்ரூட்டை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். வெள்ளை பூண்டு பச்சைமிளகாயை தட்டி அதில் சேர்க்கவும்,மேலும் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, ரசபொடி இவைகளை சேர்த்து ரசம் கொதித்ததும் கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான பீட்ரூட் ரசம் தயார்.
Comments
Post a Comment