South Indian Farmers' GOD!_தென்னக விவசாயிகளின் மனித தெய்வம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இக்குறள் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ தென்னக மக்களின் வறுமை தீர்த்த கர்னல் பென்னி குயிக் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சென்னை அரசு பொறியாளர்:
ஜான் பென்னி குவிக் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சென்னை அரசின் பொதுப்பணித் துறை பொறியாளராக இருந்தார்.
பெரியாறு அணை உருவாக காரணமானவர்:
பெரியாறு அணை கட்டுவதற்கு முன்பு, வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டதோடு, மக்கள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்தனர். இதை கண்ட பென்னி குயிக் மிகவும் வருந்தினார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாக வங்கக் கடலில் கலப்பதை பார்த்து இதன் குறுக்காக ஒரு அணை கடௌடி மலையின் வடக்கு பகுதியில் திருப்பி விட்டால் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இத்திட்டத்தை உருவாக்கி ஆங்கில அரசின் பார்வைக்கு வைத்து ரூபாய் 75
இலட்சம் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.
மூன்று ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.பிரிட்டனில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாழும் பகுதியில், சகல வசதியுடன் மாளிகைகளில் வாழ்ந்த பென்னிகுக்கின் குடும்பம், முல்லைப் பெரியாறு அணைக்காக செய்த பொருட்செலவுகளால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாயினர். இதனால் மாளிகையில் வாழ்ந்த அவர்கள் கடைசியில் அரசாங்கம் அளித்த தொகுப்பு வீடுகளில் குடியேறி வாழ்ந்துள்ளனர்.
வெற்றிகரமாக பெரியாறு அணை கட்டி முடித்த பென்னிகுக்கிற்கு சென்னை மாகான பொதுப்பணித்துறை செயலாளராக பதவி உயர்வு கொடுத்து அழகு செய்தது ஆங்கிலேய அரசு. தொடர்ந்து சிறிது காலம் ஹூப்பர்ஹில்& இல் உள்ள ராயல் இந்திய பொறியியல் கல்லூரியின் கடைசி தலைவராகவும், சென்னை பல்கலைக் கழகத்தின் ஆசிரியராகவும் இருந்தார். 1898&ல் சென்னை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதார வாரிய தலைவராக பதவி வகித்தார்.




  • தமிழ் நாடு அரசால் முல்லை பெரியார் அணையில் பென்னி குக் 
    அவர்களுக்கு ஒரு சிலை வைத்துள்ளது. 
  • தமிழக அரசு தேனி மாவட்டத்தில் கர்னல் பென்னி குக் அவர்களுக்குஒரு மணி மண்டபம் முன்னால் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் ஜனவரி 15,2013, அன்று திறக்கப்பட்டது.
  • தேனி மாவட்ட மக்கள் தை பொங்கல் அன்று அவர் சிலைக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றன.
  • மதுரை விவசாய குடும்பத்தில் இன்றும் தம் பிள்ளைகளுக்கு பென்னி குக் அவர்களின் பெயர் வைக்கின்றன.
அணை திறக்கும் தருவாயில் பென்னி குக் அவர்கள் பேசியது :

"நான் இப்புவியில் வந்து செல்வது ஒரு முறை தான், எனவே நான் ஒரு நற்செயல் புரிந்திடவேண்டும். இதை தள்ளி வைபதற்கோ அல்லது தவிர்பதற்கோ இடம் இல்லை . என்னெனில், மீண்டும் ஒரு முறை நான் இப்புவியில் வரப்போவது இல்லை."

இன்றும் தென்னக மக்களின் குடிநீர் தேவையும், விவசாய தேவையும் பூர்த்தி செய்வது முல்லை பெரியார் அணை நீர் தான். எனவே கர்னல் பென்னி குக் அவர்கள் விவசாயிகளின் மனித தெய்வம் என்பதில் மாற்றம் இல்லை.



Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

தங்க ஆபரணங்கள் சேர

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி