Meenakhi Amman Temple!_மதுரையின் மணிமகுடம் ( மீனாட்சிஅம்மன் கோவில்)
மீனாட்சி மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால், அம்மன் சன்னிதானம் முதன்மையா உள்ளது.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவ பெருமான் காட்சி கொடுத்ததால் இந்த சிவசக்தி தலம் உருவானது.
மீனாட்சி அம்மன் கோவில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 8 கோபுரங்கள், 2 விமானங்களை உடையது. இக்கோவிலில் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு நூற்றாண்டு கட்டப்பட்டது.
இதில் தெற்கு கோபுரம் மிக உயரமான தாகும்.
ஆயிரங்கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. இம்மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களை பார்க்கவே ஏராளமான சுற்றுலாவாசிகள் வருகை புரிகின்றன.
இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலை மிகவும் பெரியது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டிய போது இவ்விநாயகர் சிலை கிடைத்தது. எனவே காலத்தின் கணக்கில் மிகப் பழமையானது.
கல்யாண மண்டபம், 100 கால் மண்டபம், 1000 கால் மண்டபம், வானை முட்டும் கோபுரம் என 33 ஆயிரம் சிலைகளுடன் கம்பீரமாக மதுரைக்கு பெருமை சேர்க்கிறது இக்கோவில்.
Comments
Post a Comment