Diwali Leagiyam_தீபாவளி லேகியம்
தீபாவளிக்கு பொதுவாக நாம் வீட்டில் எண்ணையில் பொரித்த பலகாரம் மட்டுமல்லாது நம் நண்பர்கள், உறவினர்கள் கொடுக்கும் இனிப்பு, மற்றும் கடையில் வாங்கப்பட்ட டால்டாவினால் செய்யப்படும் பலகாரங்களையும் சாப்பிடுவோம். இது பலபேருக்கு செரிமானக் கோளாறு மற்றும் பலவகையான உபாதையை கொடுக்கும். இதற்கு நம் முன்னோர் தந்த தீர்வு தீபாவளி லேகியம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தீபாவளி லேகியம்:
-------------------------------
தனியா - 4 கப்
இஞ்சி - 200 கிராம்
ஓமம் - 100 கிராம்
சுக்கு, மிளகு,
திப்பிலி - தலா 10 கிராம்
வெல்லம் - 100 கிராம் (துருவல்)
ஏலக்காய் பொடி - 5கிராம்
நெய் - 1/4 கப்
செய் முறை:
--------------------
தனியாவை ஊறவைத்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை அரைத்து சாறு எடுக்கவும்.சுக்கு, மிளகு, திப்பிலியை பொடித்துக் கொள்ளவும். வடிகட்டிய தனியா சாறு, இஞ்சி சாறு, சுக்கு, மிளகு, திப்பிலி பொடி, ஓமம், ஏலக்காய் தூள், அனைத்தையும் வெல்லத்தோடு கலக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இந்த கலவையை ஊற்றி சிறிது சிறிதாக நெய் விட்டு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். ஆறியவுடன் பாட்டிலில் எடுத்து வைக்கவும். இனி என்ன? தீபாவளிக்கு விருந்தையும் ருசித்து, அது செரிக்க இந்த அருமையான லேகியத்தையும் ருசிப்போம்.

Comments
Post a Comment