Posts

Showing posts from November, 2018

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

Image
நம் வாழ்கை சூழலில் பல துயரங்கள்,பிரச்சனைகளை சந்தித்து கொண்டிரிகிறோம். இதிலிருந்து விடுபடவும் நம் மனம் அமைதியுறவும் கடவுள் நமக்கு அளித்த கொடை இயற்கை.

Ayurveda:One song-Medicine/relief of/from all Diseases!ஒரே பாடலில் அனைத்து நோய்க்கும் மருந்து

Image
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது தான் மருந்து, வேறு கண்டுபிடிப்புகளுக்கு இடம் இல்லை. இப்பாடலை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 எனும் பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. மூளைக்கு வல்லாரை  முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை  எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்  பசிக்கு சீரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை  காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை  காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம்  தோலுக்கு அருகுவேம்பு நரம்புக்கு அமுக்குரான்  நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைபூ  ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய்  மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை  அம்மைக்குவேம்புப்பட்டை உடலுக்கு எள் எண்ணை  உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு  கொழுப்பெதிற்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை  களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம்  குரலுக்கு தேன்ன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை  வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைபூ  சிற...

Relief from inferiority complex...Here are some tips!_தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்

Image
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் ------------------------------------------------------------------------ உங்களால் இது முடியாது, இது உங்களுக்கு தெரியாது என்று யாராவது சொன்னால் அதை விரைந்து கற்றுக்கொள்ளுங்கள். முடியாததை செய்து காட்டுங்கள். நீங்கள்அழகாக இருகிறீர்கள் என்று முதலில் நம்புங்கள். அழகுக்கும் நிறத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் என்ன சொன்னாலும் உங்களை மட்டமாக பேசினாலும் நீங்கள் அழகு என்று முதலில் நம்புங்கள். மற்ற மொழிகளை சரளமாக பேச முடியவில்லையே என்று கவலை கொள்ளதீர்கள். எல்லாம் வசமாகும், முதலில் தெரிந்த தாய் மொழியிலேயே தைரியமாகவும், சரளமாகவும் பேசுங்கள். இங்கு பலபேருக்கு தாய் மொழியே சரளமாக பேச வராது. என் வாழ்க்கை சோகமயமானது என்று எண்ணாதீர்கள்.  எந்த கவலையும் இல்லாத முழுமையான வாழ்கை இங்கு யாரும் வாழவில்லை. அனைவருக்கும் கஷ்டங்கள் உள்ளன அதை எதிர்கொள்ளுவதில் தான் நம் திறமை உள்ளது. உங்களுக்கு எதுவும் தெரியாது எதிரில் இருபவர்க்கு எல்லாம் தெரியும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். அப்படி நினைத்தால் நீங்கள் சொல்லவந்ததை முழுமையாக சொல்லமுடியாது. எல்லா விஷயங்க...

Truth in Psychology __உளவியல் உண்மைகள்

Image
சில விஷயங்களை மனிதர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தே அவர்களின் மனஓட்டத்தை தெரிந்து கொள்ளலாம். அதிகம் சிரிப்பவர்கள் தனிமையில் வாடுபவர்கள். அதிகம் தூங்குபவர்கள் சோகத்தில் இருப்பவர்கள். வேகமாகவும், குறைவாகவும் பேசுபவர்கள் அதிக ரகசியங்களை வைத்திருப்பர். அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். முரட்டுத்தனமாக சாப்பிடுபவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுகிறவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு அழுபவர்கள் பலவீனமானவர்கள்,இதயத்தால் மென்மையானவர்கள்.

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Image
ஒருவரின் பசியை போக்கும் அன்னதானமே சிறந்தது என்பர் சிலர். ஆனால் தானத்தில் சிறந்தது கன்னிகா தானம்தான்.சாஸ்திரங்களும் இதை மஹா தானம் என்கின்றன. திருமணத்தின் போது ஒரு தந்தை தன் மகளை, வேறு குடும்பத்தில் பிறந்த ஒரு ஆண் மகனுக்கு தானமாக கொடுப்பதே கன்னிகா தானம் என்பர். எல்லா தானத்திலும் இது சிறந்தது என்று சொல்ல இந்த நிகழ்வின் போது சொல்ல படுகிற மந்திரங்களும், சங்கல்ப்பங்களுமே சாட்சி. "தசானாம்பூர்வேஷம்,தசானாம்பரேஷாம், மமஆத்மனஸ்ஸ ஏகவிம்சதிகுல உத்தாரண....." என்று அந்த மந்திரம் நீள்கிறது. அதாவது, கன்னிகாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்துமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்னிகாதானம் செய்பவனும் ஆஹ, இருபத்தோரு தலைமுறையும் கரைசேர இந்த தானத்தை செய்கிறேன், என்று பொருள் வரும். உன் வம்சவிருத்திக்காக, என் குலவிளக்கை உனக்கு தானமாகத் தருகிறேன் என்று பொருள் படும் கன்னிகாதானமே உலகில் மிகச்சிறந்த தானமாகும். ஒரு பெண் பிள்ளையைப் பெற்று அவளை கண்ணனுக்கு கண்ணாக வளர்த்து, மற்றொருவனிடம் வம்சவிருதிக்காக அவளை தானம் செய்து  கொடுப்பதால், அவனது வம்சத்தில் இருபத்தோரு தலைமுறையும் கரையேற...

How to increase childrens' Memory power?_குழந்தைகளின் ஞாபகசக்தியை மேம்படுத்தும் உணவுகள்.

Image
சில வகை உணவுகள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும். சில வகை உணவுகள் குழந்தைகளின் மூளையை மந்தப்படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்: ----------------------------------------------------------------  தேன் இதில் முதன்மையானது தேன் , தேனை பள்ளிக்கு செல்வதர்க்கு அரை மணி நேரத்துக்கு முன்பு ஒரு ஸ்பூன் கொடுத்தால் அன்று முழுவதும் குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன் படிப்பிலும் முழு ஈடுபாட்டுடன் இருப்பர். பால் அடுத்து இயற்கையாக கிடைக்கும் பொருள் பால். இதில் மாட்டுப் பால் மிகவும் நல்லது. பாலை அப்படியே கொடுக்காமல் அதில் பாதி அளவு தண்ணீர் சேர்த்துகாய்ச்சி கொடுக்கவேண்டும். வேண்டுமென்றல் தண்ணீர்சேர்த்து காய்ச்சி அடிக்கடி பருகலாம். தண்ணீர் சேர்க்காமல் பருகினால் பள்ளியில் குழந்தைகளுக்கு உறக்கம் வரும், தண்ணீர் சேர்த்த பசும் பால் மிகவும் நல்லது. மீன் ஒமேகா 3 மீனில் மிக அதிகம் , இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிகின்றன. மீனை பொரித்து சாப்பிடுவதை காட்டிலும் குழம்பில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. பாசிபயறு பாசிபயறை வேகவைதோ, அல்லது அடையாகவோ செய்து சாப்பிடலாம்....

Aathichoodi_ஆரோக்கியம் தரும் ஆத்திச்சூடி

ஆரோக்கியம் தரும் ஆத்திச்சூடி: -------------------------------------------------- அன்றாடம் உடற்பயிற்சி செய்! ஆசைப் பட்டதெல்லாம் உண்ணாதே! இலைக்கறி அதிகம் கொள்! ஈறு அழுந்த பல் தேய்! உப்பு அதிகம் வேண்டாம்! ஊளைச் சதை குறை! எண்ணெய் பண்டம் தவிர்! ஏழைப்போல்உண்! ஐம்பதை நெருங்கினால் இதயம் கவனி! ஒழுக்கம் கடைபிடி! ஓயாத பேச்சுக்கு ஓய்வு தா! ஔவை வயதாகினும் இளமையாய் நினை! எஃகு போல் மன உறுதி கொள்!

Why are accessories important?_அணிகலன்களின் அவசியங்கள்

Image
அணிகலன்களை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை, அதனால் நிறையமருத்துவ பயன்களும் உள்ளன. அணிகலன்களில் உள்ள ரசாயனம் நம் உடலில் கலப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. காதணி: ------------ காதில் உள்ள நரம்பானது மூளையுடன் தொடர்புடையது. நாம் பிறந்த குழந்தைக்கு காது குத்துவதன் மூலம் குழந்தைன் மூளை வளர்ச்சி தூண்டப் படுகிறது. அதுமட்டும் இல்லாமல் குழந்தையின் கண் பார்வை பலப்படுகிறது. அதனால் தான் நாம் காது குத்துவதை ஒரு விழாவாக கொண்டாடுகிறோம். மூக்குத்தி: --------------- மூக்கில் உள்ள நரம்புக்கும் சிறுகுடல், மற்றும் பெருங்குடலுக்கும் தொடர்புண்டு. மூக்குத்தி அணிவதால் வயிறு சம்பந்தமான நோய் நீங்குவதுடன், மாதவிடாய் கோளாறும் வராது. கழுத்தில் அணியும் அணிகலன்கள்: ------------------------------------------------------- கழுத்தில் அணிகலன்கள் அணிவதால் தலைக்கும், உடலுக்கும் சக்தி ஓட்டம் அதிகரிகின்றது. என்னெனில் உடலில் பல உணர்வு புள்ளிகள் கழுத்தில் உள்ளன. வளையல்: ---------------- கை மணிக்கட்டில் முக்கியமான 5 புள்ளிகள் உள்ளன. அவை தூண்டப் படுவதன் மூலம் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கின்றது, ஹார்மோன...

Bhagavat Gita in short_பகவன் கிருஷ்ணர் மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு உபதேசித்த அருளுரைகள்.

Image
மான அவமானங்கள், ஏமாற்றங்கள்,தோல்விகள், நிலைகுழைந்து போகச்சையும் சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டம், வஞ்சகச் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர்கள், நண்பர்களின் சூழ்ச்சிகள்,  அன்பின் இழப்புகள், சுக துக்கங்கள், இவையெல்லாம் மானிட வாழ்கையின் அன்றாட நிகழ்வுகள்! இதுபோன்ற போராட்டங்களையெல்லாம் மனஉறுதிடனும், துணிச்சலுடனும், பொறுமையுடனும், நிதானத்துடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ! அவனே! மிகச்சிறந்த பராகிரமம்பொருந்திய வெற்றியாளனாக பரிநாமிக்கிறான்!                                                                           -  பகவத்கீதை -

Beetroot Rasam!_ஆரோக்கிமான பீட்ரூட் ரசம்....

Image
 பீட்ரூட்டின் நன்மைகள்:  இரத்த சோகைக்கு ஏற்றது. மன அழுத்தம் குறையும். நிம்மதியான துக்கம் கிடைக்கும். இரத்த கொதிப்பு கட்டுப்படும். இதயத்திற்கு ஏற்றது.   பீட்ரூட் ரசம் : (4 பேர் உண்ணும் அளவு)   தேவையான பொருட்கள்:  பீட்ரூட் சிறிய அளவு -1  புளி                  - சிறிது  தக்காளி              - 1  மஞ்சள்தூள்          - சிறிது  ரசப்பொடி            - 1 தேகரண்டி  பெருங்காயம்         - சிறிது  பூண்டு               - 4 பல்  பச்சைமிளகாய்       - 2  எண்ணெய்           - 1 ஸ்பூன்  கடுகு, உ.பருப்பு       - சிறிது  செய்முறை : பீட்ரூட்டை சிறித...

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

Image
சிவகங்கை மாவட்டம் அர்ச்சுனாபுரத்தில் ராஜவம்சத்தில் பிறந்த ராமலிங்க சேதுபதிக்கும், இந்திராணிக்கும் பிறந்தவர்கள் நல்லதம்பியும், நல்லதங்காளும். இளம் வயதிலேயே பெற்றோர் இறந்ததால் நல்லதம்பி நல்லதங்காளை மிகவும் பாசமாக வளர்த்து, நிறைய சீர்வரிசை செய்து ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை ராஜவம்ச காசிராஜனுக்கு திருமணம் செய்து வைத்தான். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள். ராமநாதபுர மாவட்டத்தில் 12 வருடங்களாக மழை இல்லை. பஞ்சம் ஊரில் தலைவிரித்தாடியது. ராஜா காசிராஜனையும் விடவில்லை வறுமை.  வீட்டில் உள்ள பொருள்கள் போக நல்லதங்காள் கொண்டு வந்த சீர்வரிசையான  தங்கம், வைரம், மற்றும் வெள்ளி பாத்திரங்கள் அனைத்தையும் விற்றாயிற்று. குழந்தைகள் பசியால் வாடுவதை பார்க்க முடியவில்லை பொற்றவர்களுக்கு. அப்போது தான் நல்லதங்காள் காசிராஜனிடம்,"நானும் நம் குழந்தைகளும் என் அண்ணணை பார்த்து வருகிறோம்.  என் அண்ணீ நம் பிள்ளைகளுக்கு விருந்து சமைத்து போடுவாள். நம் ஊரில் முதல் மழை பெய்தவுடன் ஓடி வந்து விடுகிறோம், அனுமதி தாருங்கள்" என்றாள். காசிராஜன் அதற்கு சம்மதிக்கவில்லை. பசியும், பஞ்சமும் வதைத்து இறந்தாலு...

South Indian Farmers' GOD!_தென்னக விவசாயிகளின் மனித தெய்வம்

Image
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். இக்குறள் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ தென்னக மக்களின் வறுமை தீர்த்த கர்னல் பென்னி குயிக் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். சென்னை அரசு பொறியாளர்: ஜான் பென்னி குவிக் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சென்னை அரசின் பொதுப்பணித் துறை பொறியாளராக இருந்தார். பெரியாறு அணை உருவாக காரணமானவர்: பெரியாறு அணை கட்டுவதற்கு முன்பு, வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டதோடு, மக்கள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்தனர். இதை கண்ட பென்னி குயிக் மிகவும் வருந்தினார். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாக வங்கக் கடலில் கலப்பதை பார்த்து இதன் குறுக்காக ஒரு அணை கடௌடி மலையின் வடக்கு பகுதியில் திருப்பி விட்டால் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இத்திட்டத்தை உருவாக்கி ஆங்கில அரசின் பார்வைக்கு வைத்து ரூபாய் 75 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்ப...