Soft idly_மிருதுவான இட்லிக்கு
இட்லி எல்லோருக்கும் பிடித்த மற்றும் எளிதில் ஜிரணம் ஆகும் உணவு. இதை பக்குவமாக ஆட்டி இட்லி சுடுவதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதற்கு சரியான அளவு பொருள்களை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
-------------------------------------------
இட்லி அரிசி - 4கப்
உழுந்தம் பருப்பு - 1கப்
வெந்தயம் -2ஸ்பூன்
இட்லி அரிசியையும் வெந்தயத்தையும் குறைந்தது 5 மணி நேரமாவது தனித்தனியாக ஊறவைக்க வேண்டும்.
உழுந்தை தண்ணீரில் நனைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட வேண்டும். இது அரைமணி நேரம் ஊறினால் போதுமானது.
கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை போட்டு பிறகு ஆடியவுடன் உழுந்தைச் சேர்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே தண்ணீர் அனைத்தையும் ஊற்றிவிடாமல் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். உழுந்து நன்கு எழும்பிவர அரைமணி நேரம் ஆகும். பிறகு இதை எடுத்துவிட்டு அரிசியை போட வேண்டும். அரிசியை மை போல் அரைத்து விடாமல் சிறிது கொரகொரப்பாக இருக்க வேண்டும். இம்மாவை உப்பு போட்டு கரைத்து 8 மணி நேரம் புளிக்கவைத்து இட்லி சுட வேண்டும்.

Comments
Post a Comment