இன்றைய நவீன காலத்தில் நம் பழைய உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றை மறக்காமல் வாழ சில குறிப்புகளும், சில ஆன்மீகத் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
Vallarai spinach benefits _வல்லாரைக் கீரை
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
வல்லாரக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நல்ல நினைவாற்றல் வரும்.
ஒருவரின் பசியை போக்கும் அன்னதானமே சிறந்தது என்பர் சிலர். ஆனால் தானத்தில் சிறந்தது கன்னிகா தானம்தான்.சாஸ்திரங்களும் இதை மஹா தானம் என்கின்றன. திருமணத்தின் போது ஒரு தந்தை தன் மகளை, வேறு குடும்பத்தில் பிறந்த ஒரு ஆண் மகனுக்கு தானமாக கொடுப்பதே கன்னிகா தானம் என்பர். எல்லா தானத்திலும் இது சிறந்தது என்று சொல்ல இந்த நிகழ்வின் போது சொல்ல படுகிற மந்திரங்களும், சங்கல்ப்பங்களுமே சாட்சி. "தசானாம்பூர்வேஷம்,தசானாம்பரேஷாம், மமஆத்மனஸ்ஸ ஏகவிம்சதிகுல உத்தாரண....." என்று அந்த மந்திரம் நீள்கிறது. அதாவது, கன்னிகாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்துமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்னிகாதானம் செய்பவனும் ஆஹ, இருபத்தோரு தலைமுறையும் கரைசேர இந்த தானத்தை செய்கிறேன், என்று பொருள் வரும். உன் வம்சவிருத்திக்காக, என் குலவிளக்கை உனக்கு தானமாகத் தருகிறேன் என்று பொருள் படும் கன்னிகாதானமே உலகில் மிகச்சிறந்த தானமாகும். ஒரு பெண் பிள்ளையைப் பெற்று அவளை கண்ணனுக்கு கண்ணாக வளர்த்து, மற்றொருவனிடம் வம்சவிருதிக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் இருபத்தோரு தலைமுறையும் கரையேற...
நமக்கு நிலத்தடிநீர் குறைந்து வருவது அறிந்ததே! இன்னும் 30 வருடத்தில் நம் சந்ததியினர் நீருக்காக மிகவும் அவதிக்குள்ளாக போகிறார்கள். ஏனெனில் அப்போது நிலத்தில் சுத்தமாக தண்ணீர் கிடைக்காது. இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க உள்ள சில வழிகளில் ஒன்று நிறைய மரங்கள் வளர்த்தல், மற்றொன்று மழைநீர் சேகரித்தல். மழைநீர் சேகரிப்பு தொட்டி நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்க வேண்டியது அத்தியாசியம். நாம் நம் குழந்தைகளுக்காக வீடு, நகை போன்றவைகளை சேமித்தாலும் அதை விட மிகவும் அவசியமானது மழைநீரை சேமிப்பது. மழைநீரை எவ்வளவு நாட்கள் சேமித்து வைத்தாலும் அது கெட்டு போவது இல்லை. சராசரியாக நாம் நம் வீட்டுமழைநீரை சேமித்து பயன்படுத்தினாலே நமக்கு ஒரு வருடம் நிலத்தடிநீருக்கான தேவை இருக்காது. இதற்கு சில ஆயிரங்கள் செலவுதான் என்றாலும், அதன் பயன்கள் கணக்கில் அடங்காதது. நாம் நம் சந்ததியினருக்கு செய்யும் பெரும் உபகாரம், அவர்களுக்கு சொத்து சேர்த்து கொடுப்பதல்ல. மழைநீரை சேகரித்து அதன் மூலம் நிலத்தடிநீரைப் பாதுகாப்பதே. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிலத்தடிநீரைக் காப்போம்.
வலம்புரிச் சங்கை வழிபடும் முறை வலம்புரி சங்கு உருவாகும் விதம்: கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல்கள் வகை புழுக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம் தான் சங்கு. இதில் சிறிதாகவும், நீளவாக்கிலும் உள்ளது பெண் சங்கு, பெரிதாகவும், தடிமனாகவும் உள்ளது ஆண் சங்கு. சங்குகளின் மேல் உள்ள கோடுகளை வைத்து அது வலம்புரி சங்கா அல்லது இடம்புரி சங்கா என வகைப் படுத்துவர். ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு. ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடது புறம் வந்தால் அது இடம்புறிச் சங்கு. இடம்புறிச் சங்கை காட்டிலும் வலம்புரி சங்குதான் அபூர்வமானது. இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப் படுகிறது அதனால் இதற்கு தெய்வீக சக்தி மிக அதிகம். வலம்புரி சங்கின் சிறப்பு: மகா விஷ்ணுவின் இடது கையில் இருப்பது வலம்புரி சங்கு. சங்கை நம் காதில் வைத்தால் "ஓம்" என்னும் பிரணவ ஓசை நமக்கு கேட்கும். வலம்புரி சங்கை வீட்டில், வியாபாரம் பார்க்கும் இடத்தில் வைத்து பூஜித்து வந்தால...
என் மனதை மிகவும் பாதித்த விசையத்தை இங்கே பதியலாம் என எண்ணுகிறேன். நெகிழி நம் அன்றாட பயன்பாட்டு பொருளாகியுள்ளது. அது விளைவிக்கும் கேடு பெருமளவு. நெகிழியை எரித்தால் உண்டாகும் 'டையாக்சின்'என்னும் நச்சுப்புகை உடலுக்கு மிகவும் தீங்கானது. நாம் உண்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களை விலங்குகள் உண்பதால் அவைகளின் உணவுக் குழாய் பாதிப்படைகிறது. நாம் சூடான உணவுப் பொருள்களை நெகிழித் தாள்களில் வைத்து உண்பதால் உண்டாகும் நோய்களில் புற்றுநோய் முதன்மையாது. நெகிழிகள் மண்ணில் கலந்து வேளாண் வளத்தை குறைப்பதுடன். கடலில் கலந்து அங்கு வாழும் மீன்களின் உணவு மண்டலத்தை பாதிப்பதுடன், மீன்களை சாப்பிடும் மனிதர்களின் உடலுக்கும் கேடுவிளைவிக்கிறது. இவ்வளவு அபாயகரமான நெகிழியை முடிந்த அளவு நாம் பயன்படுத்தாமல் தவிர்ப்போம். அதன் உற்பத்தியை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் அர்ச்சுனாபுரத்தில் ராஜவம்சத்தில் பிறந்த ராமலிங்க சேதுபதிக்கும், இந்திராணிக்கும் பிறந்தவர்கள் நல்லதம்பியும், நல்லதங்காளும். இளம் வயதிலேயே பெற்றோர் இறந்ததால் நல்லதம்பி நல்லதங்காளை மிகவும் பாசமாக வளர்த்து, நிறைய சீர்வரிசை செய்து ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை ராஜவம்ச காசிராஜனுக்கு திருமணம் செய்து வைத்தான். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள். ராமநாதபுர மாவட்டத்தில் 12 வருடங்களாக மழை இல்லை. பஞ்சம் ஊரில் தலைவிரித்தாடியது. ராஜா காசிராஜனையும் விடவில்லை வறுமை. வீட்டில் உள்ள பொருள்கள் போக நல்லதங்காள் கொண்டு வந்த சீர்வரிசையான தங்கம், வைரம், மற்றும் வெள்ளி பாத்திரங்கள் அனைத்தையும் விற்றாயிற்று. குழந்தைகள் பசியால் வாடுவதை பார்க்க முடியவில்லை பொற்றவர்களுக்கு. அப்போது தான் நல்லதங்காள் காசிராஜனிடம்,"நானும் நம் குழந்தைகளும் என் அண்ணணை பார்த்து வருகிறோம். என் அண்ணீ நம் பிள்ளைகளுக்கு விருந்து சமைத்து போடுவாள். நம் ஊரில் முதல் மழை பெய்தவுடன் ஓடி வந்து விடுகிறோம், அனுமதி தாருங்கள்" என்றாள். காசிராஜன் அதற்கு சம்மதிக்கவில்லை. பசியும், பஞ்சமும் வதைத்து இறந்தாலு...
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டி என்னும் அர்த்தத்தில் சொல்லுவர். ஆனால் உண்மையான விளக்கம் என்னவென்றால். ஆடம்பரமாக வாழும் தாய். பொறுப்பில்லாமல் வாழும் தந்தை. ஒழுக்கமற்ற மனைவி. ஏமாற்றும், மற்றும் துரோகம் செய்யும் உடன் பிறந்தோர். சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள். இந்த ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் அவன் ஆண்டி ஆவான் என்பது தான் பொருள்.
குதிரை சிலை சொல்லும் வரலாறு நாம் நிறைய போர்வீரர்களின் சிலைகளைப் பார்த்திருப்போம். அவற்றில் நிறைய சிலைகள் வீரர்கள் குதிரையின் மேல் அமர்ந்திருப்பது போல் இருக்கும். அச்சிலைகளில் சில சூட்சமங்கள் உள்ளன. அதாவது குதிரை சிலையில் குதிரை இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியிருந்தால் அந்த வீரர் இயற்கையாக மரணம் அடைந்தார் என பொருள். குதிரை ஒரு காலை ஊன்றி மறு காலை தூக்கியிருந்தால் அந்த வீரர் போரில் காயம் அடைந்து பிறகு இறந்தார் என பொருள். குதிரை இரண்டு கால்களையும் தூக்கி இருந்தால் அந்த வீரர் போரில் வீர மரணம் அடைந்தார் என பொருள். எனவே இனி நாம் இச்சிலைகளை காணும் போது அவ்வீரர்களின் வீரமரணம் பற்றியும் அறிவோம்.
முள்ளு முருங்கை ரொட்டி நாள்பட்ட சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்து முள்ளு முருங்கை. இதை ரொட்டியாக செய்து சாப்பிட்டால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவர். செய்முறை: தேவையான பொருள்கள்: இட்லி அரிசி -1/2 கிலோ பூண்டு - 6 ல் தேங்காய் துருவல்- சிறிது மிளகாய் வத்தல் - 2 மிளகு - 1/2 ஸ்பூன் முள்ளு முருங்கயிலை- சிறிது உப்பு - தேவைகேட்ப முதலில் முள்ளு முருங்க இலைகளை காம்பு நீக்கி நன்கு ஆய்ந்து கொள்ள வேண்டும். இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைக்க வேண்டும். அரைக்கும் போதே முள்ளு முருங்க இலை உட்பட மேலே கூறிய அனைத்து பொருள்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். இதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரைத்த மாவை வாழையிலையில் ரொட்டியாக தட்...
பொதுவாக தங்க ஆபரணங்களை சுக்ர ஓரையில் வாங்கி வந்து அதை நம் வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டு எடுக்கவேண்டும். மேலும் ஆபரணங்கள் சேர இரண்டு சக்திவாய்ந்த மந்திரம் உள்ளன, அவைகளை பூஜை நேரத்தில் பாராயணம் செய்து வந்தால் வீட்டில் தங்கம் சேரும். முதல் மந்திரம் : ------------------------- ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி வசம் வா வசம் வா ஸ்ரீம் மம தநூகர புவாய நமோ நம இரண்டாம் மந்திரம் : --------------------------------- ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் சொர்ண ஆக்ராஷன தேவ்யை இரட்சிப்பாய் இம்மந்திரங்களை நாள் தோரும் பாராயணம் செய்து சொர்ண லெட்சுமியை ஆராதனை செய்ய வேண்டும்.
Comments
Post a Comment