Posts

Showing posts from July, 2018

Urad dal benefits _உளுந்தின் சக்தி

Image
உளுந்தில் இரும்புச்சத்து உள்ளது. ஜீரண சக்திக்கு உதவுகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது.

Vallarai spinach benefits _வல்லாரைக் கீரை

Image
வல்லாரக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நல்ல நினைவாற்றல் வரும்.

Gooseberry benefits _நெல்லிக் கனி

Image
நெல்லிக்காய் அரு நெல்லி, கரு நெல்லி என்று இரு வகைப்படும். நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  வயிற்றுப் செரிமானப் பிரச்சனைகள் தீரும். நெல்லிக்காயை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும். நெல்லிக்காய் சாறுடன் எலுமிச்சைசாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.

Jaggery benefits_வெல்லத்தின் அவசியம்

Image
நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ததற்கு ஒரு முக்கிய காரணம் அவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெள்ளம் மற்றும் நாட்டுச்சக்கரையை பயன் படுத்தியதுதான். வெல்லத்தில் அதிக நார்ச்சத்து அதிகம்.  இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால்  உடலில் நோய்எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. வெல்லம் நம் வயிற்றுப் பகுதியை சுத்தம் செய்து, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் இவைகளை நன்கு வேலை செய்ய வைக்கிறது. நாமும் நம் மூதாதையர் போல் வெல்லம் மற்றும் நாட்டுச்சக்கரையை பயன்படுத்தி நம் உடலைப் பேணுவோம்.

Guava benefits_ கொய்யாப் பழம்

Image
கொய்யாப் பழம் பல மருத்துவ குணம் கொண்டது. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையாக இருக்கலாம். முதுமையை தள்ளிப்போடலாம். கொய்யாப் பழம் கல்லீரல்,மண்ணீரல் இவைகளில் ஏற்படும் புண்களை சரி செய்கிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் கோளாறுகளை சரிசெய்கிறது. கொய்யாப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது. மேலும் அல்சரை குணமாக்குகிறது.

பிரண்டையின் மகத்துவம்

Image
பிரண்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பிரண்டைக்கு வைரத்தை கூட அறுக்கும் குணமுன்டு என போகர் கூறியுள்ளார். பிரண்டையில் ஏராளமான சுண்ணாம்பு சத்து உள்ளது. வாயில் இருந்து ஆசனவாய் வரை உள்ள பகுதிகளில் 300 வகையான நோய்களை தீர்க்கும் குணமுண்டு என போகர் கூறியுள்ளார். எலும்பு சம்பந்தமான நோய் மூட்டு வழி போன்றவற்றை குணமாக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி,  வயிற்றுவலி போன்றவற்றை குணமாக்கும். இதை துவையல், குழம்பு போன்ற வகையில் செய்து சாப்பிடலாம்.

Honey benefits _தேனின் அருமை

Image
தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேன் பல நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. தேனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் இருமல் குணமாகும். நெல்லிச் சாறுடன் தேன் கலந்து பருகினால் உடலில் இன்சுலின் சுரக்கும். ரோஜாப்பூ குல்கந்துடன் தேன் சேர்த்து பருகினால் உடல் சூடு தனியும். தேங்காய்ப் பாலுடன் தேன் சேர்த்து பருகினால் குடல்புண், வயிற்றுப்புண் குணமாகும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகினால் பித்தம் தீரும். கேரட் சாறுடன் தேன் கலந்து பருகினால் இரத்த சோகை குணமாகும்.

How to behave with children?_குழந்தைகளிடம் அடக்குமுறை வேண்டாம்

Image
எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் குறும்பு சேட்டைகள் செய்யத்தான் செய்வார்கள். அதை நாம் பெரிது படுத்தக் கூடாது. இன்று குறும்பு செய்யும் குழந்தைகள் தான் நாளை பெரிய ஆளாய் வருவார்கள். (எடுத்துக்காட்டு பகவான்கிருஷ்ணர்). அவர்கள் செய்யும் சேட்டைகள் தலைவழியைத் தந்தாலும் அதை தடுக்கக் கூடாது. பாத்திரத்தை உருட்டும் பிள்ளை இசை கலைஞர் ஆகலாம்.  பந்தை தலைக்கு வைத்து தூங்கும் பிள்ளை விளையாட்டு வீரர் ஆகலாம். அவர்கள் கையில் ஆயுதமோ,பேட்டரியோ, மாத்திரை வகைகளோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி நம் கண்காணிப்பில் அவர்களுக்கு பிடித்த விளையாட்டை அவர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்.

Mobile charger_மொபைல் சார்ஜர்

Image
நாம் வெளியில் வேலை செய்துவிட்டு இரவு வேலையில் தான் நம் அலைபேசிக்கு சார்ஜ் போடுவோம். ஆனால் போதுமான சார்ஜ் ஏரியதும் அதை பார்த்து மின்யிணைப்பை துண்டிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அலைபேசி வெடித்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி மின்யிணைப்பில் உள்ள போதே போன் பேசக் கூடாது. இதனால் உயிர் சேதம் ஏற்படக் கூட வாய்ப்பு உள்ளது.

Disadvantages of batteries_பேட்டரியின் ஆபத்து.

Image
நம் வீட்டுக் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளின் பின்புறம் உள்ள பட்டன் பேட்டரிகள் மிகவும் ஆபத்தானது. இப்பேட்டரிகள் குழந்தைகள் கட்டும் கடிகாரம், வாழ்த்து அட்டை, விளையாட்டு பொம்மைகளிலும் இருக்கும். இதை குழந்தைகள் தெரியாமல் விழுங்கி விட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும். குழந்தை விழுங்கிய உடனேயே சென்றாலும் அது உடனடியாக உணவுக் குழாயை பாதித்துவிடும். ஒரு மாமிச துண்டில் இந்த பேட்டரியை வைத்து சோதித்து பார்த்தால் விளைவை கண்கூடாகப் பார்க்கலாம். பேட்டரி உருகி மாமிசம் வெந்துவிடும். எனவே குழந்தைகளுக்கு இந்த பேட்டரி பொம்மைகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதுடன், இது போன்ற பொருள்களை குழந்தைகளின் கைக்கு எட்டாமல் வைக்க வேண்டும்.