Posts

Showing posts from September, 2018

Soft idly_மிருதுவான இட்லிக்கு

Image
இட்லி எல்லோருக்கும் பிடித்த மற்றும் எளிதில் ஜிரணம் ஆகும் உணவு. இதை பக்குவமாக ஆட்டி இட்லி சுடுவதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதற்கு சரியான அளவு பொருள்களை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: ------------------------------------------- இட்லி அரிசி             - 4கப் உழுந்தம் பருப்பு      - 1கப் வெந்தயம்                  -2ஸ்பூன் இட்லி அரிசியையும் வெந்தயத்தையும் குறைந்தது 5 மணி நேரமாவது தனித்தனியாக ஊறவைக்க வேண்டும். உழுந்தை தண்ணீரில் நனைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட வேண்டும்.  இது அரைமணி நேரம் ஊறினால் போதுமானது. கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை போட்டு  பிறகு  ஆடியவுடன் உழுந்தைச் சேர்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே தண்ணீர் அனைத்தையும் ஊற்றிவிடாமல் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். உழுந்து நன்கு எழும்பிவர அரைமணி நேரம் ஆகும். பிறகு இதை எடுத்துவிட்டு அரிசியை போட வேண்டும்.  அரிசியை மை போல் அரைத்து விடாமல் சிறிது கொரகொரப்பாக இருக்க வேண்டும்...

Pearl Millet Porridge benefits_காலை உணவுக்கு ஏற்றது கம்பங்கூழ்

Image
நம் தினசரி வாழ்வில் காலையுணவு மிகவும் அத்தியாவசியம். இரவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாம் அவசியம் காலையுணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை உணவுக்கு மிகவும் ஏற்றது கூழ் வகைகள். அதிலும் கம்பங்கூழ் உடலுக்கு வலிமை சேர்க்கும். இதில் ஏராளமான விட்டமின்களும், மினரல்களும் நிரைந்திருக்கிறது. கம்பு உடல் எலும்புகளை பலமாக்குகிறது. எனவே நாம் காலை உணவாக கம்பங்கூழை எடுத்துக் கொள்வோம்.

கலசம் வைக்கும்முறை

Image
பொதுவாக வீட்டில் வைத்து வழிபடும் கலசத்தில் நீரையோ அல்லது பச்சரிசியையோ நிரப்ப வேண்டும். வரலெட்சுமி விரதம் அன்று இரண்டு கலசத்தை வைக்க வேண்டும்.  ஒன்று பெருமாளுக்கு மற்றொன்று தேவிக்கு. தேவிக்கு வைக்கும் கலசத்தில் பச்சரிசியை நிரப்ப வேண்டும்.  அதனுள் ஏலக்காய், கிராம்பு வெற்றிலை பாக்கு போன்றவற்றை வைத்து திருமாங்கல்யம் சூட்டி மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

Varalakshmi Pooja_வரலெட்சுமி விரதம்

Image
வரலெட்சுமி விரதம் சுமங்கலி பெண்களால் கணவருக்கு ஆயுள் மற்றும் வளர்ச்சி வேண்டி கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் வரலெட்சுமியின் அருளால் குடும்பத்தில் அமைதியும் பொருளாதார மேன்மையும் மற்றும் குடும்பத் தலைவர் ஆயுளும் பலப்படும். இவ்விரத்தை ஆடி மாதம் பௌர்ணமிக்கு முதல் வெள்ளியன்று கடைபிடிக்க வேண்டும்.  இதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து மாலை வேளையில் விளக்கேற்றி கலசத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். அன்று தேவிக்கு ஏதாவது இனிப்பு படைக்க வேண்டும். மறுநாள் வெள்ளிக் கிழமை அதிகாலையில் எழுந்து மாவிளக்கு வைத்து கொழுக்கட்டை, பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து தேவியை ஆராதித்தல் வேண்டும். மறுநாளோ அல்லது திங்கள் கிழமையோ கலசத்துக்கு ஆரத்தி எடுத்து கலசத்தை எடுத்து வைக்க வேண்டும். கலசத்தை கலைக்கும் வரை சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

Hanuman chalisa for education _கல்வியில் மேம்பட ஹனுமன் சாலீஸா விரதம்

Image
துளசி தாசர் இயற்றிய ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்வதன் மூலம் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். நினைவாற்றல் மேம்படும். இதை ஹனுமன் விரதமாக பின்பற்றுபவர்களும் உண்டு. ஹனுமன் சாலீஸா விரதம் ஒரு மண்டலம் இருக்கவேண்டும்.(48 நாட்கள்).இந்நாட்களில் வீடுவாசல் சுத்தம் செய்து தினமும் அதிகாலை விளக்கேற்றி ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யவேண்டும். ஏற்றும் விளக்கு நெய் விளக்காக இருக்கவேண்டும். இந்நாட்களில் வீட்டில் மாமிசம் சமைக்கக் கூடாது. ஐயப்பன் போன்று ஹனுமனும் பிரம்மச்சாரியாதலால் மிகவும் தூய்மை ஆக இவ்விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

Porataasi Fasting _புரட்டாசி விரதம்

Image
வெங்கடாஜலபதி பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருப்பர். இவ்விரதம் இருப்பதால் குடும்ப கஷ்டம் நீங்குவதுடன் பொருளாதாரம் உயரும். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விஷேசம். புரட்டாசி சனிகிழமை அன்று அதிகாலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து, பூஜை அறையில் மாவிளக்கு வைத்து குடும்பத்துடன் அமர்ந்து பெருமாளின் திருநாமங்களை பாடவேண்டும். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். இவ்விரதம் இருப்பதால் சர்வசம்பத்துக்களும் உண்டாகும்.