Posts

Showing posts from September, 2019

Can eggs be eaten by people who have cholesterol?__முட்டை சாப்பிடலாமா கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்?

Image
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?: அசைவப் பிரியர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பண்டம் முட்டை. இதில் கொலஸ்ட்ரால் உள்ளதா? இல்லையா? என பலருக்கு சந்தேகம் உண்டு. பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவில் கொலஸ்ட்ரால் இல்லை. மாறாக மஞ்சள் கருவில் 213 மில்லிகிராம் அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

How to remove pesticides from vegetables?__ரசாயன மருந்துகளை எளிய முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து நீக்கும் வழி

Image
ரசாயன மருந்தை காய்கறி மற்றும் பழங்களில் இருந்து எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம்: நாம் அன்றாடம் உண்ணும் காய் மற்றும் கனிகளில் ஏராளமான பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கின்றனர். இதனால் நம் உடலில் சாதாரண தொற்று முதல் புற்றுநோய் வரை அனைத்து வகையான நோய்களும் வர வழிவகை செய்கின்றன. இந்த பூச்சி கொல்லி மருந்தை நீக்க மிக எளிய வழி ஒன்று உள்ளது. அதற்கு தேவை கல்உப்பு மற்றும் மஞ்சள்தூள்.  காய்கறி மற்றும் பழங்களை கழுவும் முறை: நாம் என்ன என்ன காய்கறிகளை சமைக்கப் போகிறோமோ அந்த காய்கள் அனைத்தையும் ஒரு சட்டியில் போட்டு அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சிறிது கல்உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். பதினைந்து நிமிடம் கழித்து அவைகளை நன்கு தேய்த்து கழுவி சமைக்கவும். இதே முறையில் பழங்களையும் கழுவலாம். இவ்வாறு கழுவி சாப்பிடும் பொருள்களே ஆரோக்கியமானது.

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் கூடாது(அறிவியல் விளக்கம்):

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் கூடாது : புரட்டாசி மாதம் நம்மில் பெருவாரியான மக்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது இல்லை. இதற்கு ஆன்மீகக் காரணங்கள் இருந்தாலும், சில அறிவியல் காரணங்களும் உள்ளன. இதை நாம் உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் இதற்கு ஆன்மீக காரணத்தை பிரதானமாகக் கூறியுள்ளனர். அறிவியல் காரணம்: பொதுவாக தமிழ் மாதங்களான ஆடி மற்றும் ஆவணியை காற்றடி காலம் என்பர். அதே போல் பங்குனி மற்றும் சித்திரை மாதத்தை வெயில் காலம் என்பர். ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதத்தை மழைக் காலம் என்பர். இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சீதோஷண நிலையை நமக்கு உணர்த்தும்.  ஆனால் இந்த புரட்டாசி மாதம் மட்டும் சீதோஷண நிலை சீராக இருக்காது. இம்மாதம் விழும் மழைத் தூரலினால் உண்டாகும் உஷ்ணம் வெயில் காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை விட மிகக் கடுமையானது. இப்படி உஷ்ணமாக இருக்கும் நம் உடல் அசைவ உணவை ஜுரணித்துக் கொள்ளுமா? ஜுரணிக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவம் தவிர்க்க வழியுறுத்தி உள்ளனர்.

Want black hair?Read this!_முடி கருமையாக வளர கருவேப்பிலையின் பங்கு

Image
முடி கருமையாக வளர கருவேப்பிலையின் பங்கு நம் அனைவருக்குமே முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு கருவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது. எனக்குத் தெரிந்த சில முறைகளில் கருவேப்பிலையை பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும். 1. கருவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 100 கிராம் அளவு தேங்காய் எண்ணையோடு லேசாக சூடு படுத்தவும், எண்ணை கொதித்து விடக் கூடாது. இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்றாகவும், கருமையாகவும் வளரும். 2. கருவேப்பிலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். 3. வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதை கருவேப்பிலையுடன் அரைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளைஞர்களுக்கு இளநரை பிரச்சனை அண்டாது.

Village style fish fry!!கிராமத்து மீன் வறுவல்

Image
கிராமத்து மீன் வறுவல்: தேவையான பொருள்கள்: நெய் மீன்(அல்லது)  ஏதாவது மீன்வகை- 1கிலோ  எண்ணை        - தேவைகேற்ப சோம்பு                -1ஸ்பூன் மிளகு                  -1ஸ்பூன் பூண்டு                 -10 பல் மிளகாய்வத்தல்- 12 உப்பு                      -தேவைகேற்ப செய் முறை: சோம்பு, மிளகு, வத்தல்,பூண்டு இவைகளை நன்கு வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும். இவைகளை சுத்தம் செய்த மீன் துண்டுகளுடன் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். அந்த மீன் துண்டங்களை தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணை ஊற்றி நன்கு பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது மிதமான தீயில் பொரிக்க வேண்டும். மிகச் சுவையான கிராமத்து மீன் வறுவல் தயார்.