Posts

Showing posts from June, 2019

ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு சாற்றுவதன் காரணம்

Image
ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு சாற்றுவதன் காரணம்: ராமாயணப் போரில் பல அம்புகள் ஆஞ்சநேயரைத் தாக்கியது. ஏனெனில் ராம, லெட்சுமணனை அனுமன் தன் இரு தோளிலும் தாங்கி இருந்தார். அதனால் ராவணன் எய்த பல அம்புகள் அனுமனைத் தாக்கியது.  அனுமனின் வலியை போக்கி ரணத்தை ஆற்ற ஸ்ரீராமர் முதன்முதலில் அனுமனுக்கு வெண்ணை காப்பு சாற்றினார். அதன் காரணமாகவே அனுமனுக்கு வெண்ணை சாற்றும் வழக்கம் வந்தது.

Madurai Mutton Chukka!__மதுரை மட்டன் சுக்கா!

Image
மதுரை மட்டன் சுக்கா: செய்வதற்கு மிகவும் எளிமையாகவும், மிகவும் சுவையானதாகவும் இருக்கும் இந்த மதுரை மட்டன் சுக்கா. தேவையான பொருள்கள்: மட்டன்              - 1/2 கிலோ பூண்டு             - 8 பல் இஞ்சி               - சிறிது மிளகாய் தூள்-1 ஸ்பூன் சீரகத் தூள்      - 1/2 ஸ்பூன் உப்பு                   - தேவைகேற்ப எண்ணை         - தேவைகேற்ப தாளிக்க: சோம்பு சிறிது மிளகாய் வத்தல் 2 செய்முறை: பூண்டு,  இஞ்சி, மிளகாய் தூள், சீரகத்தூள் அனைத்தையும் வழுவழுப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் ஒரு குழிக் கரண்டி எண்ணை ஊற்றி சோம்பு, பட்ட மிளகாய் தாளித்து அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரை கிலோ மட்டனையும் சேர்த்து வதக்க வேண்டும் . தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மட்டன் வேக 5 விசில் குக்கரில் வைக்கவும். மட்டன...

How to reduce water wastage?_ தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சில வழிகள்......

Image
தண்ணீரை சிக்கனமாக்க பயன்படுத்த சில வழிகள்: *  பல் தேய்க்கும் போதும், சேவ் செய்யும் போதும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையான போது மட்டும் குழாயை திறக்க வேண்டும். * வாஷிங் மிஷினில் துவைப்பதை விட கையில் துவைப்பது உடலுக்கு மட்டும் அல்ல துணிகளுக்கும் ஆரோக்கியம். இதனால் தண்ணீரும் நிறைய சேமிக்கலாம். * காய்கறிகள் கழுவும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். * தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் போது நேரத்தை குறித்துக் கொள்ளலாம். தொட்டியில் நீர் நிறைந்து கீழே விழும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. * பாத்திரம் கழுவும் போது தண்ணீரை பிடித்து வைத்து பயன்படுத்தினால் நல்லது. * இன்று பல வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளது. அதில் கழிவு நீர் செல்ல ஒரு குழாய் இருக்கும், இந்த நீரை வீணாக்காமல் பாத்திரம் கழுவ, காய்கறி கழுவ என்று பயன்படுத்தலாம். * மழைநீரை சேகரித்து அந்த நீரை சமையலுக்கு கூட பயன்படுத்தலாம். * இன்றைய சூழலில் நாம் நம் வாரிசுகளுக்கு சொத்து, பணம் இவைகளை சேமிப்பதை விட தண்ணீரை சேமிப்பதே இன்றைய அவசிய தேவை என்பதே நிதர்சனமான உண்மை.

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Image
குதிரை சிலை சொல்லும் வரலாறு நாம் நிறைய போர்வீரர்களின் சிலைகளைப் பார்த்திருப்போம். அவற்றில் நிறைய சிலைகள் வீரர்கள் குதிரையின் மேல் அமர்ந்திருப்பது போல் இருக்கும். அச்சிலைகளில் சில சூட்சமங்கள் உள்ளன.  அதாவது குதிரை சிலையில் குதிரை இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியிருந்தால் அந்த வீரர் இயற்கையாக மரணம் அடைந்தார் என பொருள். குதிரை ஒரு காலை ஊன்றி மறு காலை தூக்கியிருந்தால் அந்த வீரர் போரில் காயம் அடைந்து பிறகு இறந்தார் என பொருள். குதிரை இரண்டு கால்களையும் தூக்கி இருந்தால் அந்த வீரர் போரில் வீர மரணம் அடைந்தார் என பொருள். எனவே இனி நாம் இச்சிலைகளை காணும் போது அவ்வீரர்களின் வீரமரணம் பற்றியும் அறிவோம்.

7 lines Vishnu Sakasranamam_ஏழு வரியில் விஷ்ணு சகஸ்ரநாமம்

Image
ஒரு முறை பார்வதி தேவி ஈசனிடம், எல்லோரும் பயன்பெரும் விதமாக 1000 திருநாமங்கள் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமத்தை எளிய முறையில் பாராயணம் செய்ய வழி என்ன? என்று ஈசனிடம் கேட்டதற்கு பலனாக நமக்கு கிடைத்தது தான் இந்த ராம மந்திரம். இதை தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் பாராயணம் செய்தால் விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னதற்கு சமமாகும். இதனால் நம் பாவங்கள் தொலைந்து மனம் தூய்மை அடைகிறது. ராம மந்திரம்: ஸ்ரீராம ராம ராமேதி ரமே  ராமே மனோரமே ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே  ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ஸ்ரீராம நாம வரானந ஓம் நம இதி இதை வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாராயணம் செய்து பயனடைய வேண்டுகிறேன்.