Posts

Showing posts from December, 2018

Colocasia/Seppankizhangu Fry_சேப்பங்கிழங்கு வறுவல்

Image
சேப்பங்கிழங்கு வறுவல்   என் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் இந்த சேப்பங்கிழங்கு வறுவல் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் செய்முறை மிகவும் எளிது, ஆனால் சுவையோ மிகவும் அபாரமாக இருக்கும். சாதாரணமாக நாம் வீட்டில் வைக்கும் குழம்புக்கும், அல்லது கலந்த சாதங்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையானபொருள்கள்:  சேப்பங்கிழங்கு                  : 1/2 கிலோ தேங்காய் துருவல்            : சிறிது சோம்பு                                    : 1 ஸ்பூன் மிளகாய்வத்தல்                 : 7 வெள்ளைபூண்டு      ...

Thiruvathirai Kali_திருவாதிரை களி

Image
திருவாதிரை களி மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் சேர்ந்தநாள் ஆருத்ரா திருநாள். இந்த திருநாளில் நாம் நடராஜபெருமாளுக்கு திருவாதிரை களி நைவேத்தியம் படைத்தால் நம் குடும்பத்துக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.

Healthy life....Here are some tips!_ஆரோக்கியமாக வாழ சில வழிகள்

Image
எந்த விஷயத்தையும் நேர்மறையாக சிந்தியுங்கள். அன்றாட வேலைகளை பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள். அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு எழுந்துவிடுங்கள். தினமும் குறைத்து  3 லிட்டர் தண்ணீராவது குடிக்கவேண்டும். கண்டிப்பாக காலை உணவை தவிர்க்ககூடாது. சரியான நேரத்தில் சாப்பிடவேண்டும்.  காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்து கொள்ளவேண்டும். ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை சாப்பிடவேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும், யோகா செய்வது உடல்நலத்துக்கும் நல்லது, மனதுக்கும் நல்லது.  படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். புத்தகம் வாசிக்க தினமும் அரைமணிநேரம் ஒதுக்கவேண்டும். உங்களை மகிழ்ச்சியாகும் விஷயங்களை செய்ய தயங்காதீர்கள். குடும்பத்தோடு விடுமுறையின் போது வெளிஊருக்கோ அல்லது வெளிஇடங்களுக்கோ செல்லும்  பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களை சுற்றி மகிழ்ச்சியான விஷயங்கள் மற்றும் சூழ்நிலைகளோடு எப்போதும் இருங்கள். எதிர்மறை எண்ணத்தோடு இருப்பவர்களோடு கொஞ்சம் எப்போதும் தள்ளி இருங்கள். தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள். தேவைப்படும்போது முடியாது, வேண்டாம் என...

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Image
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டி என்னும் அர்த்தத்தில் சொல்லுவர். ஆனால் உண்மையான விளக்கம் என்னவென்றால்.  ஆடம்பரமாக வாழும் தாய்.   பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.  ஒழுக்கமற்ற மனைவி.  ஏமாற்றும், மற்றும் துரோகம் செய்யும் உடன் பிறந்தோர். சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள். இந்த ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் அவன் ஆண்டி ஆவான் என்பது தான் பொருள்.