Posts

Showing posts from January, 2019

Saasthira Bandham_சாஸ்திர பந்தம்

கடன் பிரச்சனை தீர்ந்து செல்வவளம் பெற வேண்டுமா? இன்றைய  சூழ்நிலையில் நாம் கடன் வாங்குவது நம்மில் பலருக்கு அவசியமானதாக உள்ளது. நம் தொழிலை விரிவு படுத்த, விவசாயத்திற்கு, திருமணத்திற்கு என்று நாம் கடன் வாங்குவதை தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் வட்டி கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வட்டி கட்ட மேலும் கடன் வாங்கி அல்லல் படுபவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்களுக்கான பதிவுதான் இது. சாஸ்திர பந்தம் கடன்களை அடைத்து செல்வவளம் பெற பாம்பன் சுவாமிகள் இயற்றியது இந்த சாஸ்திர பந்தம். இதை தினமும் விளக்கேற்றி முருகப்பெருமான் முன் இம்மந்திரத்தை படித்து வந்தால் கடன்கள் அடைந்து வாழ்வில் செல்வவளம்பெறுவோம். " வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா மாலைபூ நேமதிற மால் வலர்தே - சாலவ மாபாசம் போக மதிதேசார் மாபூதம் வா பாதந் தாவேல வா" 

Ice biryani benefits_ காலை உணவுக்கு ஏற்றது பழையசாதம்

Image
காலை உணவுக்கு ஏற்றது பழைய சாதம் பழைய சாதத்தில் உள்ள சிறப்பு: நம் முன்னோர்களும், விவசாயிகளும் விரும்பி சாப்பிட்ட பழைய சாதத்தில்பல நன்மைகள் உள்ளன. பழைய சாதத்தை தொடர்ந்து உண்பதால் நம் உடலில் மெட்டபாலிச இயக்கம் சரியாக உள்ளது என்று அர்த்தம். அதாவது நம் உடலில் இறந்த செல்கள் அதிகம் உள்ளன அதை வெளியேற்றி புதிய செல்களை உருவாக்குவது தான் மெட்டபாலிச இயக்கம். பழைய செல்கள் பலவழிகளில் வெளியேறுகின்றன. புதிய செல்கள் நம் உடல் வலிமையை கூட்டுகின்றன .பழைய சாதத்தை நாம் சாப்பிடும் போது நம் உடலில் புதிய செல்கள் உருவாகுகின்றன. வெளிநாட்டினர் விரும்பி உண்ணும் உணவு: வெளிநாட்டினர் பழைய சாதத்தை விரும்பி உண்ண ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு நம் உணவின் அருமை தெரிந்து நம் பாரம்பரிய உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். நாம் அவர்களின் உணவான பயனற்ற கெல்லாக்ஸ், ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலை வளர்கிறோம். மேலை நாட்டில் இருந்து அறிமுகமான இந்த வகையான உணவுகளை உண்பதை பெருமையாகவும், நம் ஊரு உணவுகள் உண்பதை கௌரவ குறைவாகவும் நினைக்கிறோம். காலை உணவாக பழைய சாதத்தை எடுத்துக்கொள்வது மிக, மிக நல்லது. இதை நம் குழந்தைக...

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Image
வலம்புரிச் சங்கை வழிபடும் முறை வலம்புரி சங்கு உருவாகும் விதம்: கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல்கள் வகை புழுக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம் தான் சங்கு. இதில் சிறிதாகவும், நீளவாக்கிலும் உள்ளது பெண் சங்கு, பெரிதாகவும், தடிமனாகவும் உள்ளது ஆண் சங்கு. சங்குகளின் மேல் உள்ள கோடுகளை வைத்து அது வலம்புரி சங்கா அல்லது இடம்புரி சங்கா என வகைப் படுத்துவர். ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு. ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடது புறம் வந்தால் அது இடம்புறிச் சங்கு. இடம்புறிச் சங்கை காட்டிலும் வலம்புரி சங்குதான் அபூர்வமானது.  இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப் படுகிறது அதனால் இதற்கு தெய்வீக சக்தி மிக அதிகம். வலம்புரி சங்கின் சிறப்பு: மகா விஷ்ணுவின் இடது கையில் இருப்பது வலம்புரி சங்கு. சங்கை நம் காதில் வைத்தால் "ஓம்" என்னும்  பிரணவ ஓசை நமக்கு கேட்கும். வலம்புரி சங்கை வீட்டில், வியாபாரம் பார்க்கும் இடத்தில் வைத்து பூஜித்து வந்தால...

How to become a SIDDHA?_சித்தராக மாறுவது எளிதான காரியமா?

Image
சித்தநிலையை எப்படி அடைவது ? நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மிகஅதிகம். இதனால் நம்மில் பலர் சாமியார்ஆகிவிடலாம் என்று கூட நினைப்போம். ஆனால் அது எளிதானகாரியம் அல்ல. ஒரு மனிதன் சித்தநிலையை அடைவது,ஒரே பிறவியில் கிடைக்கும் பாக்கியம் இல்லை. பல பிறவிகளில் அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மங்கள் போன்றவையே அவனை இறைநிலைக்கு அழைத்துச் செல்கிறது. உதாரணமாக புத்தர்ஞானம் பெருவதற்க்கு முன்பாக, அவர் அதற்கு முன்பு எடுத்த முன்னூர் பிறவிகள் அவருக்கு புலப்பட்டதாம். அதே போல் தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம், தவவலிமை ஆகியவை ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடன் சேர்ந்து பிறக்கும். அதனால் அவை அனைத்தும் பல பூட்டுக்களால்,அவனுள்ளே அடைத்து வைக்கப் பட்டிருக்கும். உதரணமாக பண ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை போன்ற எல்லா ஆசைகளும் ஒருவனுக்கு எழும். அவையெல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வரவேண்டும் என்பதற்காக தரப்பட்டவை. அருணகிரிநாதர் முருகப்பெருமானின்அருளை பெறுவதற்கு முன்பாக,பெண் பித்தனாக இருந்தார். அவர் சகோதரிகூறிய ஒரு வார்த்தை அவர் பெண்ஆசையை வெறுக்ககாரணமாக அமைந்தது. பின் மகானாக மாறி முருகப்பெருமானிட...