Shri Bogar Siddha__ஸ்ரீ போகர் சித்தர்

போகர் சித்தரின் மூலமந்திரம்: ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா சித்தர் போகர் சுவாமிகள் போற்றி! போற்றி!! போகர் பற்றிய சில தகவல்கள்: போகர் ஆகாயப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இளம் வயதில் இறந்த இளைஞனின் மனைவி அழுது கொண்டிருந்தாள். அவளது விதவைக் கோலம் போகரை மிகவும் பாதித்தது. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகில் இருக்கும் நவநாத சித்தரின் சமாதியை அடைந்தார். நவநாத சித்தர் அவருக்கு காட்சி அளித்தார். போகரும் சஞ்சீவினி மந்திர வித்தையை கற்றுத் தருமாறு அவர்களிடம் கேட்டார். போகா! இந்த மக்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்ன தான் துன்பம் வந்தாலும் திருந்தி வாழார். அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மீண்டும் பிறப்பார்கள். நீ போய் உன் தவத்தை மேற்க்கொள் போ! என்றார். ஆனால், போகர் திரும்பவும் மந்திரத்தை கற்றுத் தருமாறு வற்புறுத்தினார். நவநாத சித்தர்கள் பொறுமையிழந்து கோபமாக போகா! தெய்வ நியதிக்கு எதிராக நீ செயல் படுகிறாய். நீ கற்றுக் கொண்ட வித்தைகளால் தெய்வ நிந்தனைகள் தான் அதிகமாகும் எனவே நீ கற்றுக் கொண்டது எல்லாமே உனக்கு மறந்து போய்விடும்...... முத்தீயும் ...