Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி

முள்ளு முருங்கை ரொட்டி நாள்பட்ட சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்து முள்ளு முருங்கை. இதை ரொட்டியாக செய்து சாப்பிட்டால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவர். செய்முறை: தேவையான பொருள்கள்: இட்லி அரிசி -1/2 கிலோ பூண்டு - 6 ல் தேங்காய் துருவல்- சிறிது மிளகாய் வத்தல் - 2 மிளகு - 1/2 ஸ்பூன் முள்ளு முருங்கயிலை- சிறிது உப்பு - தேவைகேட்ப முதலில் முள்ளு முருங்க இலைகளை காம்பு நீக்கி நன்கு ஆய்ந்து கொள்ள வேண்டும். இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைக்க வேண்டும். அரைக்கும் போதே முள்ளு முருங்க இலை உட்பட மேலே கூறிய அனைத்து பொருள்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். இதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரைத்த மாவை வாழையிலையில் ரொட்டியாக தட்...